உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

271

அமைந்த தனிச்சிறப்பாண்மையை நேரில் கண்டு நெகிழ்ந்து போய் உரைக்கிறார் புலவர் வன்பரணர்.

“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீஇப்

புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக்

கேழற் பன்றி வீழ அயலது

ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும்

வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்....

ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ”

(புறம். 152)

யானையை வீழ்த்திய அம்பு, புலியின் பெரிய வாயுள் புகுந்து அதனை வீழ்த்திப், பின்னர் ஒரு புள்ளிமானையும் பன்றியையும் வீழச்செய்த, அடுத்திருந்த புற்றிற் கிடந்த உடும்பில் தைத்து நின்றது!

ஓரியின் இவ்வொப்பற்ற திறனுக்கு ஈடாகப் பண்டையோர் பாடற் சான்று ஒன்றும் இன்றாம்! பிற்காலப் புனைந்துரைப் பாடல்கள் 'அலையுருவக் கடலுருவ' "மேருவை உருவு மென்றால், விண்கடந்தேகுமென்றால்" (கம்பர்) என வருபவற்றை ஒப்பிடுதல் ஆய்வுக்கு உரியதன்றாம்.

வில்லுக்கு ஒருவனாக விளங்கிய ஏந்தலின், ஏந்தலின், வலிய வில்லாண்மையைச் சுட்டு முகத்தான் 'ஓரி' என்றும், அதனை விளக்கு முகத்தான் ‘வல்வில் ஓரி' என்றும் பண்டையோர் பெயர்சூட்டி மகிழ்ந்தனர் எனக் கொள்க.

“வில்லாண்மையில் சிறந்தமை வீறுபெற்று விளங்கிய பிற்காலத் தன்றே, பேறு பெற்ற காலத்தன்றோ பெயர் சூட்டுவது, பிற்காலத்தே இவன் இன்னவாறிருப்பன் என்பதை உணர்ந்தோ பெயர் சூட்டினர்' என்று மறுப்பார் உளராயின, நாம் பயில வழங்கும் பண்டையோர் பெயர்களுள் பலவும் பிறந்த நாளிட்ட பெயரன்று; சிறப்பாலும் சீர்மையாலும் வீற்றாலும் விழுப்பத்தாலும் பெற்ற பெயர்களே என்றும், இந்நாளிலும் துறவுப் பெயர், முடிசூட்டுப் பெயர், தூநீர் முழுக்குப் பெயர், பட்டப் பெயர் இன்னவாறெல்லாம் இருத்தலைக் காண்கிறோமே என்றும் அமைக.

கங்கை கொண்டான், கடாரங்கொண்டான், ஈழந்திறை காண்டான், கொல்லங் காண்டான், ான், முடிவணங்கான்,