உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. வள்ளல் பாரி

-

“உயிர்க்கு ஊதியமாவன ஈதலும் இசைபட வாழ்தலும்” என்றார் பொய்யா மொழியார். இப்மொழிக்கு ஏற்பச் சங்க நாளில் வாழ்ந்த பெருமக்களை ‘எண்மர்' என எண்ணிக் கணக் கிட்டனர். அவருள் தலைமையாளன் ‘பாரி'

பாரியின் புகழ் 'முல்லை'க்குத் தேர் ஈந்தது என்பதை நாடறியும் இப்பாரியொடும் சேர்த்து, இணைத்து எண்ணப் பெறுபவன் பேகன்; அவன் மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளியோன். ஏனை அறுவரினும் இவ்விருவர் புகழும் புலவர்களால் பெரிதும் போற்றப் பெறுதல் கண்கூடு.

“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும்’

(பழமொழி. 74; புறப். வெண்பா. 194)

எண்மருள் பாரியும், பேகனும் எடுத்தோதிச் சிறப்பிக்கப் பெறுவது ஏன்? முல்லையும் மயிலும் மொழித்திறம் அறியா உயிரிகள். அவை தேடி வந்து பாடிப் பரிசு வேண்டியன அல்ல. அவற்றைத் தாமே கண்டு, தண்ணளியால் வழங்கப்பெற்றன தேரும், பேர்வையும்! தேடிவந்து பாடிநின்ற புலவர்க்கும் கூத்தர்க்கும் பிறர்க்கும் வழங்கும் கொடைகளினும், இவற்றுக்கு வழங்கிய கொடை அளப்பரும் வளப்பெருமை வாய்ந்தது; ஆகலின் தனிச் சிறப்புற்றன.

66

‘பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை

நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்

கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

பரந்தோங்கு சிறப்பிற் பாரி”

என்றும்,

“உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்”

(புறம். 200)

(புறம். 14)