உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ்வளம்

15

என்றும் புறப் பாடல்களால் பாராட்டப் பெறுகின்றன. இவற்றைப் பாடியவர்களோ முறையே, 'கபிலபரணர்’ என்று சான்றோரால் சிறப்பிக்கப்பெறும் சீர்த்தியர்.

முல்லை, மயில் ஆகியவற்றுள்ளும் முல்லை ஓரறிவுயிரி; மயிலைப் போல் இடம் பெயர்தல் அறியாதது; அன்றியும் ஐயறிவு மயிலைப் போல் களிப்பும் கவலையும் பிறவும் வெளிப் படக் காட்ட அறியாதது; உணர்வு நிலையில் மிகக் குறைந்தது. இருந்தும் தான் உணர்ந்த உணர்வே உருவாய் உருகி நின்று. அப்பேரருள் பெருக்கத்தால் அதற்குத் தேர் தந்த பெருமகன் பாரிவேள் ஆகலின் பேகனினும் அவன் முதன்மையுற்றான்.

விட

பாரியின் சிறப்பு முல்லைக்குத் தேரளித்த அளவில் நின்று வில்லை. தனக்கு உரிமையாக இருந்த முந்நூறு ஊர்களையுமே முழுமையாகப் பரிசிலர்க்கு வாரி வழங்கி விட்டான். அவன் வழங்காமல் வைத்திருந்தது பறம்பு மலை ஒன்றுமட்டுமே! அன்றியும், தன்னையும், தன் உயிரன்புப் புலவர் கபிலரையும் பிறர்க்கென வழங்கினான் அல்லன். இதனைக் கபிலர் பெருமானே,

66

'முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்

யாமும் பாரியும் உளமே

குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே”

என்று பாடுவதால் அறியலாம்.

(புறம். 110)

இத்தகு மேதக்க கொடையாளன் 'பாரி' என்னும் பலர் புகழ் பெயர் தாங்கிய பெற்றியை அறிதல், பெருகிய இன்பம் பயப்பதுடன் முந்தையோர் பெயர் சூட்டும் திறத்தை அறிந்து மகிழ்தற்கும் வாய்ப்பாம்.

‘பார்’ என்னும் சொல்லுடன் ‘இ’ என்னும் இறுதி நிலை இணைந்து ‘பாரி' என்னும் பெயர் அமைந்ததாம், ‘காரி' 'ஓரி' என்னும் பெயர்களும் இவ்வாறு அமைந்தனவே.

“பார்' என்பது ‘பரவுதல்' பண்பால் அமைந்த பெயர், அனைத்துப் பொருள்களையும் நீர்ப்பரப்பையும் அடக்கிப் பரந்து கிடக்கும் உலகம் ‘பார்’; வண்டி, தேர் ஆகியவற்றின் அச்சின்மேல் பரவிக்கிடக்கும் பலகைப் பரப்பு, 'பார்'; நீர் பாய்ச்சுதற்காக நெடிதகன்ற பரப்புடையதாகச் செய்யப் பெற்ற தும் பல பாத்திகளைத் தன்னகத்துக் கொண்டதும் ஆ ஆகிய