உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

279

நிலப்பரப்பு, 'பார்'; அகன்று விரிந்த கல்லும், கல் நிலமும் பார்; ஆழ்ந்து நோக்குதல் இன்றி அகன்று நோக்குதலே பார்த்தல்.

இனிப், 'பாரி' என்னும் சொல்லும் பரவுதல் பண்பாலேயே கட்டில், கடல், உடற்பருமை, உடை, பூந்துகள், புவி ஆகிய வற்றைக் குறிக்கும்: புகழ் பரப்பும் இல்லாளைப் ‘பாரி' என்பதும் இக்கரணியம் கொண்டேயாம்.

“புகழ் புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோற் பீடு நடை'

என்பது திருக்குறள். (59)

'பாரித்தல்' என்பது விரித்துரைத்தல், பரப்புதல், வளர்த்

தல், மிகுதல் முதலிய அகன்மைப் பொருளிலேயே வரும்.

66

“அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்

திங்கள்”

“பகல்செல் மண்டிலம் பாரித் தாங்கு'

66

‘தந்நலம் பாரிப் பார்’

“பயனில பாரித் துரைக்கும் உரை

“பாரிய பராரை வேம்பு

(நாலடி. 151)

(பெரும். 442)

(திருக். 116)

(திருக். 193)

(நற். 218)

என்பவற்றை நோக்குக ‘ஓங்கு தாங்காக' உள்ள மரம் ‘பாரியான மரம்' என்றும், ஓங்கு தாங்காக உள்ளவர் ‘பாரியானவர்’ என்றும் இன்றும் வழங்கப் பெறுவதை அறிக. இவற்றை நோக்குவார், 'பாரி' என்னும் பெயர்ப் பொருளின் நயம் நன்கறிந்து மகிழ்வர்.

பாரி, உடலால் பரியவன்;

உருவால் உயர்ந்தவன்; பரந்தகன்ற மார்பினன்; தடநெடுங்கையினன்; பரந்தோங்கு புகழாளன். இவற்றைக்,

66

"கூர்வேல் குவைஇய மொய்ம்பில் தேர்வண் பாரி”

(புறம். 118)

"தேர் வீசிருக்கை நெடியோன்”

(புறம். 114)

“நெடுமாப் பாரி’”

(புறம். 201)

“மலர்ந்த மார்பின் மாவண் பாரி”

(பதிற். 61)

"இலங்குதொடித் தடக்கைப் பாரி”

(புறம். 307)