உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ் வளம் 16

விடையாகவே இதனைக் கூறுகின்றான். இப்பகுதி ஆயிரவரை உயிர்ப்பலி ஊட்டிய நிகழ்ச்சியாயின் சொல்லுபவன் கவலைக் குரல் காட்டியிருக்கக் கூடும். அன்றிக் கேட்பவனும் கவலை பெருக்கியிருக்கக் கூடும். இரண்டுமே இல்லை!

முன்பு செங்குட்டுவனை மலை நாட்டிலே கண்டு கண்ணகி வரலாற்றைச் சாத்தனார் கூறுங் காலையில், பாண்டியன் செய்த தவற்றினையும் அதன்பின் அவன் மாண்டதனையும் கேள்விப் பட்டு, "வருந்தினன்; மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்"என உரைத்துக் கவலை கொண்டவன், இங்கே ஆயிரவர் பலியினைக் கேள்வியுற்று வாளா இருப்பானோ? இருக்கவும் உள்ளம் விடுமோ? இது பெரும் பழி" என்று கொதித்துரைத்திருக்க மாட்டானோ? இவற்றுள் எதுவும் இல்லை. இவ்வாறு சொல்பவனும் கேட்பவனும் சிறிதும் கவலையற்றவர்களாய்க் காணப் பெறுவதால் ஆயிரவரை உயிர்ப்பலியிட்ட நிகழ்ச்சி அங்குக் கூறப் பெற்றது இல்லையாம். அவ்வாறு பலியிட வேண்டியது இல்லையாம்.

கண்ணகியார் கணவனை இழந்த கவலையிலே, “பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தோர் பக்கமே சேர்க”

என்று

66

தீக்கு ஆணையிடுகின்றார். அவர் ஆணைப்படியே தீத்திறத்தோர் அனைவரும் ஒழிந்திருக்க வேண்டுமே! அதனை விடுத்து ஆயிரவர் பொற்கொல்லரைப் பலியிட்டது தெய்வமும் ஏற்கத் தகாத செயல்தானே! கண்ணகியாரே தீயவர்களுக்குத் தெய்வத்தின் பெயரால் தண்டனை தந்தார். தீயவர் அழிந்து போயிருக்க வேண்டும். எஞ்சியிருந்தவர் எவரும் தீயரல்லர்! நல்லோரே! நல்லோர் ஆயிரவரைக் கொன்றது அறநெறிக்கு ஏற்குமா? அதனை ஏற்றுக் கொண்டது எனின் கண்ணகியார் கூறியது போல் மதுரை மாநகரில்,

66

'சான்றோரும் உண்டு கொல்?” "தெய்வமும் உண்டு கொல்?”

கோவல கண்ணகியரைக் கண்டு புன்சொல் கூறிய தூர்த்தனும் பரத்தையும் கவுந்தியடிகள் சாபத்தால் முள்ளுடைக் காட்டில் முதுநரியாகி ஊளையிட்டது கேட்டு நடுங்கி, “நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமை என்றறியல்