உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

87

ஆன்றோர், அறிவர் எவரும் இலரா? அவர்களெல்லாரும் தடுக்காமல் வாளாவிட்டு விட்டனரா? அன்றி இத்தண்டம் தரவேண்டியது முறையே என்று அவர்கள் உள்ளமும் ஒப்புக் கொண்டு விட்டதா? அவ்வாறாயின் பாண்டியனுக்கு மட்டு மன்று தமிழகப் பண்பாட்டுக்கே பெருங் களங்கம் ஆகும்.

-

தனி மகன் ஒருவன் உரையை அறிவு பிறழ்ந்த நேரத்தே ஏற்றுக்கொண்டு, பிறர் அறியாமல் L இட ட்ட கட்ட ளையால் நிகழ்ந்தது கோவலன் கொலை. கொலை. அதுபோல்வதா ஆயிரம் பொற்கொல்லர் கொலை? ஊர் அறியாமல் - ஏன் - நாடே அறியாமல் செய்துவிட இயலுமா? ஆயிரவர்களை எவரும் அறியாமல் ஒன்று சேர்க்கவோ பலியிடவோ கூடுமோ? அவர்களும் உவப்புடன் முன்வந்து தங்களைத் தாங்களே பலியிட ஒப்பினரா? அவர்கள் மனைவி மக்களும் உடந்தையாகி விட்டனரா? எப்படி ஒப்புவது?

மலையமான் மக்களை யானைக்காலின் கீழிட்டுக் கால்லத் துணிந்த கிள்ளிவளவனைத் தடுத்து நிறுத்தியவர் எவர்? ஒற்று வந்தான் என்று இளந்தத்தன் என்னும் புலவனைக் கொல்ல நின்ற நெடுங்கிள்ளியைத் தெருட்டி நிறுத்தியவர் எவர்? மைந்தரொடு மாறுபட்ட மன்னரை, மனைவியொடு வேறுபட்ட வேந்தரைத் திருத்தி நிலை நிறுத்தியவர் யாவர்? முடி வேந்தர்கள் ஆயினும் முறை கெட்டுச் செல்லுங்கால் இடித்துக் கூறி நன்னெறி காட்டியவர்கள் யாவர்? தமிழ் வளம் கொழித்த தகைசால் புலவர்கள் அல்லரோ? அவர்களுள் எவருமே சங்கம் இருந்து புலவர் கூட்டுண்ட தமிழ் மதுரையிலே இல்லாமல் போய் விட்டனரா? இருந்தும் தடுக்க முன் வந்தாரில்லை என்றால் பழி! மாபெரும் பழி! தமிழ்த் தாய்க்கே இழிவு! நூலுள், நீர்ப்படைக் காதையிலே,

“கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞுற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை உயிர்ப்பலி யூட்டி’

என்று வரும் வரிகளை உட்கொண்டு உரைபெறு கட்டுரை எழுதப் பெற்றதாம். இந்நீர்ப்படைக்காதை வரிகளை மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனிடம் உரைக்கின்றான். “மன்னன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை' என்ற செங்குட்டுவன் வினாவுக்கு