உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

ஆயிரவரைக் கொன்ற கொடுமையை "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” எனக் கொண்ட பாண்டிய நாட்டு அரசின் மேல் ஏற்றுதல் இழுக்காகும்.

வெற்றிவேற்செழியன் “அரைசு கெடுத்து அலம் வரும் அல்லற் காலையிலே" கொற்கையிலிருந்து மதுரைக்கு வந்தான் என்று நீர்ப்படைக் காதையிலே பாடினார் அடிகள். அரசினை இழந்து மயங்கும் துன்பமிக்க காலம் பாண்டிய நாட்டுக்கு ருந்ததே அல்லாமல், வெப்பும் குருவும் தொடர்ந்ததாகக் குறிப்பு இல்லை. வெப்பும் குருவும் தொடர்ந்தால் கண்ணகியாரின் வஞ்சினத்தால் தொடர்ந்தால் - அதற்கு மன்னனும், அவனைப் பழிவழிச் செலுத்திய ஒரு பொற்கொல்லனுமே காரணமாவர் அன்றி மற்றையோர் யாது செய்வர்?

“நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர” அரண் மனைக்குப் பொற்கொல்லன் சென்று கொண்டிருக்கும் பொழுது கோவலன் அவனைக் கண்டான். “இச் சிலம்பினை விலையிடக் கூடுமோ?" எனக் கேட்டான். “பாண்டிமா தேவிக்குரிய சிலம்பினை நான் கவர்ந்து கொண்டது வெளிப்படு முன் இவனே கள்வன் எனக் காட்டித் தந்து என்மேல் ஐயம் ஏற்படாதவாறு காப்பேன்” என உறுதி செய்து கொண்டு, காவலனைக் காணுகின்றான். தக்க உரையால் தன் எண்ணத்தையும் முடித்துக் கொள்கின்றான்.

நூற்றுவர் பின் தொடர்ந்து வரினும் எவரிடத்திலும் அவன் கரவு எண்ணத்தைக் கூறினான் அல்லன். அவரும் கேட்டாரல்லர். அது பற்றிய சிந்தனை எதுவும் அற்றவராய் அவரவர் பணிக்கு ஏகினர். காவலனிடம் பொற்கொல்லன் கரவாகப் பேசியதும், அதன் விளைவால் கோவலன் கொலை செய்யப் பெற்றதும் அவர் அறியார். ஒருவேளை, உண்மையைத் தெளிவாய் அறிந்திருந்தும், வஞ்ச உள்ளத்தாலோ, அச்ச நடுக்கத்தாலோ தடுத்து உரையாமல் இருந்திருப்பின் அவர்கள் மீது பழி சூட்டவும் கூடும். அதற்கும் வழியில்லை. அன்றிக் கொல்லப்பட்டவர்கள் என்று குறிக்கப் படுவர்களும் ம் அந்நூற்றுவர் அல்லர் ஆயிரவர். இது பெரும் பழியல்லவா! காவலன் கட மையா இது?

வெற்றிவேற்செழியன் அரசனையும் அரசியையும் இழந்த துயரத்தால் அறிவிழந்து, வெறி கொண்டு இச்செயலைச் செய்தான் என்றே கொள்வோம். அக்காலையில் அமைச்சர்,

-