உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

85

மதுரைக்கு வந்து 'காலைக் கதிர்க் கடவுள்' என்ன அரசுக் கட்டில் ஏறினான்.

ஆரியப்படை கடந்தான் ஆராயாமல் கோவலனைக் கான்றதால் பழிக்கு ஆளானான். அப்பழியை அறிந்த பின் "கெடுக என் ஆயுள் என்று அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தான். கோப்பெருந்தேவியும் “தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல்" அரசனுடன் மாண்டாள். இந்நிலைமையிலே ட்சி ஏற்கின்றான் வெற்றிவேற் செழியன். அவன் பொறுப்பு ஏற்ற காலையில் பாண்டிய நாட்டின் நிலைமை இஃது எனவும், ஆட்சி ஏற்றவன் செயல் இஃது எனவும் சிலம்பு தெரிவிக்கின்றது. அஃது, “அன்று தொட்டுப் பாண்டியநாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கையி லிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது என்பது. இஃது உரைபெறு கட்டுரையிலுள்ளது. மங்கல வாழ்த்துக்கு முன்னாகவே இருக்கும் இக்கட்டுரை அடிகள் எழுதியதுதானா? இவ்வுரையின் உண்மைதான் என்ன? இவற்றைக் காண்போம்.

பாண்டியன் பழிகாரன் ஆனதற்குக் காரணமாக இருந்தவன் பொற்கொல்லன் ஒருவன். ஆதலால் அரசுரிமை ஏற்ற வெற்றி வேற்செழியன் அக்கொல்லன் இனத்தவர் ஆயிரவரைக் கான்று களவேள்வி செய்தான். இது குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போன்றது அல்லவா! பழியைப் போக்கப் பெரும் பழியா புரிவது? செங்கோல் தென்னவர் செயலா இது?

உரைபெறு கட்டுரை அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர் ஆகிய இருவருக்கும் முன்னரே இடம் பெற்று விட்டது என்பதை அவர்கள் உரை உண்மையால் தெளியலாம். அவர்கள் கொல்லர் ஆயிரவர் பலியை ஐயுற்று எழுதினர் அல்லர். ஆனால் சிலப்பதிகாரப் புத்துரை ஆசிரியர் நாட்டாரவர்கட்கு ஐயந் தோன்றியது. பழையதை மறுக்காமலே "மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச் செய்து பலியிட்டான் போலும் என்று எழுதினார். மாவினால் இடும்பலி உயிர்ப்பலி யாகுமா? பூப்பலி போல மாப்பலி ஆகுமே அன்றி உயிர்ப்பலி ஆகாது!

ஒரு பொற்கொல்லன் செய்த தவற்றுக்காக... அவன் இனத்தவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக.. ஏதும் அறியாத