உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

தமது ஐம்பத்தொன்பதாம் ஆண்டிலே குன்றக் குறவர் கூறிய கண்ணகியார் வரலாற்றையும், அதனை விளக்கிக் கூறித் தூண்டியும் வேண்டியும் நின்ற சாத்தனார் கூற்றையும் உளத்தே தேக்கி ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் எண்ணித் திளைத்த அடிகள் அதன் பின்னரே தம் புலமைச் செறிவும் கலை நயமும் திகழ முத்தமிழ்க் காப்பியமாம் சிலம்பை இயற்றினார் ஆதல் வேண்டும்.

கண்ணகியாரின் வரலாற்றைக் கேட்டவுடனே அடிகள் நூல் தொடங்கிப் பாடியிருக்கக் கூடாதோ எனின் சாத்தனார் வரலாற்றை அடிகளிடம் கூறும் இடமே, வரலாற்றின் வேறொரு திருப்பத்திற்கு உரிய இடமாக அமைந்தது. உடனே எப்படிப் பாடத் தொடங்க முடியும்? மேலும் இலக்கியம் நாட் குறிப்பா? முடியும்?மேலும் அவ்வாறு இருக்குமாயின் கண்டவுடனோ கேட்டவுடனோ குறித்து விட முடியும்; குறிக்கவும் வேண்டும். சீரிய காப்பியம் பாடத் தொடங்குவோர் அதன் முடிநிலை தெளிந்தன்றித் தொடங்குதல் இயல்பு இல்லை. அன்றியும் சிலம்பினைச் சிறிது நோக்கிப் பார்ப்பினும் வஞ்சிக்காண்ட நிகழ்ச்சிகள் பல, புகார், மதுரைக் காண்டங்களிலே சுட்டப் பெறுவதை உணரக் கூடும். ஆகலான் வரலாறு அனைத்தும் நிகழ்ந்த பின்னரேதான் அடிகள் சிலம்பு பாடத் தொடங்கினார் என்பது தெளிவாம்.

ஆகையால் பன்னாட்டு வேந்தரும் பாராட்டுமாறு செங்குட்டுவன் சிலைக் கோயில் எடுத்து வழிபாடு செய்த பின்னரே அடிகள் கலைக் கோயிற் பணி தொடங்கினார். அப்பணி தொடங்கும் காலையில் அடிகட்கு அகவை ஏறக் குறைய 67 ஆக இருத்தல் வேண்டும். காப்பியம் எழுதவும், அரங்கேற்றம் செய்யவும் மேலும் சில பல ஆண்டுகளைச் செலவிட்டு நிறைநாட் செல்வராய்ப் பெருவாழ்வுற்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகும்.

2. உருபு செய்த உயிர்க்கொலை

பழிச் செயல் புரியார் பாண்டியர்; பழியொன்று நேரின் உயிர் வாழார். இத்தகைய பாண்டியர் குடியிலே வந்தவன் வெற்றிவேற்செழியன். ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் மதுரையிலே இருந்து அரசு புரிந்த போது, கொற்கையிலிருந்து தென்பாண்டி நாட்டைக் காத்தவன் இவ்வெற்றிவேற் செழியனே. நெடுஞ்செழியன் மாண்ட நிகழ்ச்சியை அறிந்து இவன்