உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

83

அமர்ந்திருந்தான். அதுபோழ்து நீலன் என்னும் ஒற்றர் தலைவன் வந்தான். நீலனோ, தமிழர் தம் ஆற்றலை இகழ்ந்த கனகவிசயரைச் சேரன் ஆணைப்படி பாண்டிய, சோழ வேந்தர்க்குக் காட்டி வரச் சென்றவன். அவன், பார்த்திபர் இருவரும் "தோற்றோடிய வரைச் சிறை செய்து வந்த வெற்றி போலொரு வெற்றி கண்டிலேம்” என்று கூறிய இம்மொழியைக் கொண்டு வந்து சேரனிடம் சேர்த்தான். அதனால் செங்குட்டுவன் சீற்றமுற்றுச் சோழ பாண்டியர்களுடன் போரிட எழுந்தான். அது போழ்து அருகில் இருந்த மாடலன் என்னும் மறையோன்,

66

“வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை

கிவி

99

என்றான். இவன் கூற்றால் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டபொழுது, ஆண்டு - வையங்காவல் பூண்ட ஆண்டு ஐயைந்திரட்டி (ஐம்பது) ஆகி விட்டது. முன்னரே பதினாறு இளமையில் செங்குட்டுவன் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருக்கக் கூடும் எனக் கருதிக் கொண்டு விட்டபடியால் இப்பொழுது 66 யாண்டுகள் ஆக வேண்டும்.

செங்குட்டுவன் வடநாடு சென்று இமயத்தில் கல் எடுத்துக் கங்கைக் கரை வர “எண்ணான்கு மதியம்" ஆகின்றது. அதன் பின்னர்ச் சில திங்கள் செலவிட்டே வஞ்சி வந்தடைந்திருக்கக் கூடும். ஆகலின் செங்குட்டுவன் வட நாட்டுச் செலவுக்கு மூன்று யாண்டுகளேனும் செலவிட்டு இருக்கலாம். ஆதலால் தனது 63 ஆம் ஆண்டில் குன்றக் குறவர்களாலும், புலவர் சாத்தனாராலும் தன் தம்பி இளங்கோவுடன் இருந்து கண்ணகி வரலாற்றை அறிந்து கொண்டான் செங்குட்டுவன். அப்பொழுது இளங்கோவடிகள் அகவை 59 ஆக இருத்தல் வேண்டுமன்றோ!

மயக் கல்கொண்டு வந்த பின்னர்க் கண்ணகியார் கோயில் கட்டவும், திருச்சுற்றெடுக்கவும், நடுகல் விழா நடத்தவும், அண்டை நாட்டு வேந்தர்களுக்கும், அயல் நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பி வரச் செய்தற்கும் ஆண்டுகள் சில கடந்தன. பதிற்றுப்பத்துப் பதிக ஆசிரியர் கூறியவாறு செங்குட்டுவனது 55 யாண்டு ஆட்சியில் எஞ்சியிருக்கும் ஐந்தாண்டுகளையும் இப்பணியிலே செலவிட்டான் என்று உறுதி செய்யலாம்.

-