உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ் வளம்

16

கொண்டு முறை பெறப் பதிகம் பாடியிருக்க வேண்டும். இவ்வாறு பாடப்பெற்ற பதிகங்களில் பதிகங்களில் ஒன்றே ஐந்தாம் பத்துப்பதிகமாகும். அப்பதிகம் செங்குட்டுவன் நடத்தியதாகப் பரணர் கூறும் போர்களையும், அதற்கு மேல் அவன் நடத்திய போர்களையும் இளங்கோவடிகள் குறிப்பிடும் வடநாட்டுப் போரையும் சேர்த்துத் தொகுத்து குறிப்பிடுகின்றது. அதில்,

66

கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவிற் கானம் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை

இன்பல் அருவிக் கங்கை மண்ணி”

என்னும் பகுதி குறிப்பிடத்தக்கதாம்.

-

மற்றும், நமக்குத் துணையாகும் நல்லதொரு குறிப்பையும் அப்பதிகம் தருகின்றது. “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தை யாண்டு வீற்றிருந்தான்" என்பதே அது. வாழ்ந்தது ஐம்பத்தை யாண்டு அல்ல. அவன் வீற்றிருந்தது - அரியணையில் வீற்றிருந்தது ஐம்பத்தை யாண்டு! இந்த ஆண்டினை வாழ்வுயாண்டு எனக் கருதக் கூடாதோ எனின், பதிற்றுப்பத்தின் வேறு சில பதிகங்களில் "பதினாறாண்டு வீற்றிருந்தான்”, 'பதினேழியாண்டு வீற்றிருந்தான்" என்று வருவனவற்றால் ஒவ்வாமை அறிக. அன்றியும் கல்லெழுத்துக்களிலே காணப் பெறும் காவலர் ஆண்டுகள் ஆட்சியாண்டாக இருக்கும் உண்மையும் தெளிக. வாழ்ந்ததை வீற்றிருத்தல் என்னும் வழக்கின்மையும் காண்க!

இங்குக் கூறியவற்றால் செங்குட்டுவன் ஐம்பத்தை யாண்டுகள் ஆட்சி செய்ததாகக் கொள்ள வேண்டுவது உண்மையாவதாலும், அவன் பதினாறாம்யாண்டிலே ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கக் கூடும் எனக் கருதுவதாலும் எப்படியும் செங்குட்டுவன் எழுபது யாண்டுகட்குக் குறைவு படாமல் வாழ்ந்திருந்தான் என்பது தெளிவாம். மேலும் அவன் பிற்பகுதி வாழ்விலே நிகழ்ந்ததுதான் வடநாட்டுக் கற்கோள் செலவு என்பதை ஒருவழியால் ஆராய்வோம்.

சேரனது முற்பகுதி நிகழ்ச்சியாயின் மிக உயர்ந்ததான ச்செயலைப் பரணர் கூறாது விட்டுச் சென்றிருக்க மாட்டார் என்பது உறுதி. இது நிற்க; வடநாடு சென்று கண்ணகிக்குக் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சிமா நகர் வந்து சேர்ந்த செங்குட்டுவன் ஆடல் பாடல்களில் மகிழ்ந்து அரியணையில்