உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

81

ளையவர் இளங்கோ! செங்குட்டுவனுக்கு நேர்ந்த துயரத்தைக் குறிப்பால் அறியும் திறம் இளங்கோவடிகளுக்கு இருந்தது. அத்துயரை மாற்றியமைக்கத் தக்க எண்ணம் நொடிப் பொழுதில் தோன்றியது. இவற்றை நோக்குங்கால் செங்குட்டுவனுக்கு அகவை பதினாறும், இளங்கோவுக்கு அகவை பன்னிரண்டும் ஆகவாவது இருந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வரலாம்.

இஃது ஒருபுறம் இருக்க பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தைப் பாடிய புலவர்களின் பரணர் ஆவர். அவர் பொய்யா நாவிற் பரணர் என்று கொண்டாடப் பெறும் புகழாளர். அவர் செங்குட்டுவனது வரலாற்றைப் பதிற்றுப் பத்தில் குறிப்பிடுகின்றார். சேரன் மேல் கடலிடைக் கொண்ட வெற்றியும், மோகூர் மன்னர் முரசங் கொண்ட வெற்றியும் அவரால் குறிக்கப் பெறுகின்றன. வடநாடு சென்று பத்தினிக்குக் கல் கொண்டு வந்த வரலாறு அவரால் குறிக்கப் பெறவில்லை. அன்றியும் பிற்கால வாழ்வில் செங்குட்டுவன் கொண்ட வெற்றிகளும் குறிக்கப் பெறவில்லை. பரணர் பாடிய பாடல்கள் பதிற்றுப்பத்தினை அன்றி வேறு சில தொகை நூல்களிலும் உள. அங்கெல்லாம் பெரும் வரலாறுகளைச் சுட்டிச் செல்லும் அவர், செங்குட்டுவன் பிற்பகுதி வரலாற்றின் நிகழ்ச்சிகள் நடந்த போது இருந்திருப்பாராயின் அவற்றைக் கூறாது விட்டுச் சென்றிருக்க மாட்டார். ஆதலால் பரணர் சங்குட்டுவனது முற்பகுதி வரலாற்றையே தாம் பாடிய பாடல்களில் குறித்தவர் ஆகின்றார்.

இளங்கோவடிகள் தம் நூலில் ஒரு காண்டத்தைச் சேரனுக்கு உரித்தாக்குகின்றார். அங்கே தான் செங்குட்டுவன் வடநாடு சென்று கற்புத் தெய்வத்திற்குக் கல் கொணர்ந்த வரலாறு கூறப் படுகின்றது. இளங்கோவடிகளோ ஆய்ந்து தெளிந்து அளவொடு கூறுபவர் ஆகலின், தம் நூலுக்கு ஏற்ப வடவர் போரையும், அதன் வெற்றியையும் கல்லெடுப்பையும் விரியக் கூறினார். எஞ்சிய போர்களைச் சுருக்கிக் காட்டினார். இதனால் செங்குட்டுவன் வரலாற்றின் முற்பகுதி பரணராலும், பிற்பகுதி இளங்கோவடிகளாலும் குறிக்கப் பெற்றது எனலாம்.

து இவ்வாறிருக்க, ஒவ்வொரு பத்திற்கும் பதிகம் என ஒன்று பதிற்றுப்பத்தைத் தொகுத்தோரால் எழுதிச் சேர்க்கப் பெற் றுள்ளது. அதனை எழுதியவர், வரலாறும் கால உணர்வும் தெளிய அறிந்தவர் என்பதை அவர் குறிப்புக்கள் அறியச் செய்கின்றன. பதிற்றுப்பத்துக் கூறும் சேர அரசர்கள் அத்தனை பேரின் ஆட்சியும் முடிந்த பின்னர் அவர் தக்க சான்றுகளைக்