உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம்

16

2. சிலப்பதிகார ஆராய்ச்சி

1. ‘கிழவர் இளங்கோ’

இளங்கோவடிகள் தமிழ்க் காப்பியங்களின் தந்தை ஆவர். முதற்காப்பியமாகச் சிலப்பதிகாரத்தை இயற்றினாலும் பின்வந்த காப்பிய நூல்களுக்கு இலக்கணமாக அமையும் சிறப்புப் பெற இயற்றினார். இளங்கோவடிகள் கொண்டிருந்த புலமையையும், பட்டறி முதிர்வையும் அவர்தம் சிலம்பு செவ்வனே தெரிவிப்பதாக இருக்கின்றது. மேலும், தமிழர் எழுத மறந்ததான ‘தன் வரலாறு' எங்கோவடிகளாலேதான் முதற்கண் எழுதப் படுகின்றது. ஆதலின், “தன் வரலாற்றின் தந்தை” என்றும் இளங்கோவடிகளைக் குறிப்பிடலாம். இவ்விளங்கோவடிகள் சிலம்பு எந்த அகவையில் எழுதத் தொடங்கினார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

இளங்கோ என்றவுடன் நம் மனக்கண்முன் இளமைதான் வந்து நிற்கின்றது. அவ்விளமைக் கோலந்தான் இளங்கோவடிகள் நூல் யாக்கப் புகுந்த கோலமா எனின் காண்போம். இமயத்தை எல்லையாகக் கொண்டு ஆண்ட நெடுஞ்சேரலாதன் பெற்றெடுத்த மக்கள் இருவர். அவருள் மூத்தவன் செங்குட்டுவன்; இளையவர் இளங்கோ! ஒரு நாள் மக்கள் இருவரும் பக்கத்தே இருக்க, சேரலாதன் அரியணையிலே அமர்ந்திருந்தான். அது காலையில் நிமித்தம் வல்லான் ஒருவன் அவ்விடத்தே அடைந்தான். அவன் இளங்கோவைக் கூர்ந்து நோக்கி “இவ்விளையவனே அரசாளும் லக்கணம் அனைத்தும் அமையப் பெற்றுள்ளான்; ஆதலால் இவனே அரசனாவதற்கு உரியன்” என்றான். இச்சொல்லைக் கேட்ட இளங்கோவின் முகம் மாற்றம் உற்றது. நிமித்திகனை வெகுண்டு நோக்கி “மூத்தவன் இருக்க இளையவனே ஆள வேண்டும் என்று முறைகெடக் கூறினை; உன் கூற்றைப் பொய்யாக்குமாறு இப்பொழுதே துறவு கொள்கின்றேன் என்று துணிந்தார். அப்படியே நடத்திக் காட்டினார்.

எங்கோ துறவு கொள்ளும் நேரத்தே செங்குட்டுவன் ஆட்சி ஏற்கத் தக்க ஆண்டினனாக இருந்தான். அவனுக்கு நேர்