உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கழு

சான்றில்லை. அந்நாளில் பாண்டிய நாடு போந்த வெளி நாட்டார் சிலர் எழுதிய குறிப்புக்களிலும் அவ்வரலாறு காணோம். திருஞான சம்பந்தருக்கும் பின்னே பன்னூறு ஆண்டு கடந்து எழுதப் பெற்ற சில புராணங்களில் சமணரைக் க வேற்றிய கதைகள் சொல்லப்படுகின்றன. அக்கதைகளும் ஒருமைப்பாடுடையனவாயில்லை. ஒரு புராணக் ஒரு புராணக் கதைக்கு மற்றொரு புராணக்கதை முரண்பட்டு நிற்கிறது. இப்புராணக் கூற்றுக்களைச் சரித்திர உலகம் ஏற்குங்கொல்! சரித்திர உலகம் ஏற்றுக்கொள்ளும் முறையில் அல்லவோ சான்றுகள் இருத்தல் வேண்டும்.”

66

இப்பொழுது ஞானசூரியன் என்னும் ஒரு நூல் தமிழ் நாட்டில் உலவுகிறது. அந்நூற்கண் எடுத்துக் காட்டப்பட்ட திருஞானசம்பந்தர் திருப்பாக்களுள் ஒரு மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. “அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்தவாது செயத் திருவுள்ளமே" என்பது தேவாரம். இதன்கண் போந்துள்ள 'திறம்' என்னும் சொல் ஞானசூரியனில் ‘சிரம்” என்னும் சொல்லாகமாற்றப்பட்டிருக்கிறது... அறிந்தோ அறியாமலோ உறும் மாற்றங்கள் பின்னே சரித்திர உலகிற்குப் பெருந் தொல்லை விளைக்கின்றன.

இவ்வுரை மணிகளும் மேற்கொள் விளக்கமும் உயிர்ப் பலியூட்டிய இந்நிகழ்ச்சிக்கும் முற்றிலும் பொருந்துவனவாகும்.

உயிர்ப்பலியிடல்

உண்டு என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்பல இடங்களில் சாற்றிச் செல்கின்றன. பலி பீடம், பலிபீடிகை, பலிமுன்றில், பலிப்புதவு, பலிபெறு வியன்களம், உயிர்ப்பலிமுரசு என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பூவினைத் தெய்வப் பலியாக இடுவது பூப்பலி. அதுபோல் உயிர்களை முரசங்களுக்கும், தெய்வங்களுக்கும் பலியாக இடுவது உயிர்ப்பலி. ஆனால் மக்களைப் பலியிடும் வழக்கு இல்லை. அது செய்யப்படின் கொலையாம். வீரங் கருதித் தாமே தம்மைப் பலியிட்டுக் கொள்ளும் இலக்கிய வழக்கினை இவ்வுயிர்ப் பலியூட்டுள் வைத்து எண்ணுவது முறைமையன்றாம். அதனினும் ஆயிரவரை ஒருங்கு பலியிட்டதாகக் கூறும் இந்நிகழ்ச்சியுடன் பேசவே தகுதியற்றதாம்.

“எல்லாவிடத்தும் கொலை தீது”

என்றும்,

(நான்மணி 93)