உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் வளம் பொருள்

“ஆருயிரைக் கொல்வதிடை நீக்கி வாழ்தல்”

"நன்குணர்ந்தார் என்பெறினும் கொல்லார்

91

(திரிடுகம் 25)

(சிறுபஞ்ச 48)

என்றும் அறநூல்கள் கூற, அறத்தின் தலைமணியாம் திருக்குறள் தோன்றிய நாட்டிலே ஆயிரவரைக் கொன்ற கொடுமை உண்டென்பதே பெரும் இழுக்காகும்.

66

ப்

இது நிற்க. பழமொழி நானூறு என்னும் நூலிலே இனங் கழுவேற்றினாரில்" என்று ஒரு பழமொழி சுட்டப் பெறுகின்றது. (பழமொழி 188) இது “மாறுகொண்டவர் என்று கருதி ஓர் இனத்தையே கழுவேற்றினார் இல்லை என்று உறுதியளிக்கின்றது, இல்லையா?

66

وو

பொற்றொழிற்கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர் பத்தினிக்கு ஒரு பகல் எல்லை உயிர்ப் பலியூட்டி” என்ற வரிக்குத் தவறாகப் பொருள் கருதிக் கொண்டு விட்டமையால் நேர்ந்த பிழைபாடே து. ஈரைஞ்ஞூற்றுவர் “ஆயிரவரை” என்றார் அரும்பதவுரைக்கார் இரண்டன் உருவு விரிக்க” என்றார் நாட்டார். நீர்ப்படைக் காதை வரிகளுக்குக் கருத்தினைப் பிறழக்கொண்டு உரைபெறு கட்டுரைகாரர் எழுதிய வரிகள் அரும்பத உரைகாரரையும், புத்துரைகாரரையும் மயங்கச் செய்து அவர் வழிக்கே இட்டுச் சென்றுவிட்டன. ஆனால் ‘ஈரைஞ்ஞூற்றுவர் பொற்கொல்லரும் பத்தினிக்கு ஒரு நாள் அளவும் உயிர்ப் பலியூட்டினர்’ என்று பொருள் கொள்வோமாயின் எவருக்கும் பழி இல்லையாம்.

தம் இனத்தவன் ஒருவன் செய்த தவற்றுக்கு இரங்கி அவ்வினத்தவர் ஆயிரவர் கூடி, இக்கூடாத நிகழ்ச்சிக்காக ருநாள் முழுவதும் ‘உயிர்ப்பலி' யிட்டு வாழ்த்தி வழி பட்டனர் என்று கொள்ளல் தக்கதாம். கற்புக் கண்ணகியாரின் கடுஞ் சினம் தங்கள் இனத்திற்குக் கேடு செய்து விடாமலும், அவர் உள்ளத்தைச் ‘சாந்தி’ செய்யுமாறும்; தங்கள் இனப் பழிக்குக் கழுவாய் தேடுமாறும் இவ்வுயிர்ப் பலி இட்ட னர் குற்றமாகுமோ?

எனின்

இவ்வாறு பொருள் காணுவதைத் தடுத்தது முன்னிற்கும் ஒரு வரியாம். அதனைக் காண்போம்.

“கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்

பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி