உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ் வளம்

உரைசெல வெறுத்த மதுரை மூதார் அரைசுகெடுத் தலம்வரு மல்லல் காலைத் தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் நிலைமணிப் புரவி யோரேழ் பூண்ட ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள்ஏ றினனெ

மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்

16

சிலம்பு 27: 127-38

என்பதற்கு வெற்றிவேற்செழியன் ஈரைஞ்ஞூற்றுவரை உயிர்ப் பலியூட்டி அரசுக் கட்டில் ஏறினன் எனக் கொண்டு விட்டனர். அவ்வளவே! இதற்கு முதல் வரியும் இரண்டாம் வரியும் அமைந்துள்ள நிரலும், உயிர்ப்பலி நிகழ்ச்சியும், உரைபெறு கட்டுரைக் குறிப்பும் பின்னிப் பிணைந்து மாறு பொருள் காணுமாறு செய்து விட்டன. ஆனால் பொற்கொல்லர் ஆயிரவர் பத்தினிக்கு ஒரு பகற் பொழுதளவு உயிர்ப்பலியூட்டி புகழ் எங்கும் பரக்கும்படி மிக்க மதுரை மூதூர் தன் அரசினை இழந்து மயங்கும் துன்பமிக்க காலத்தே கொற்கையிலிருந்த வெற்றிவேல் செழியன் தென்னாட்டின்கண் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய உயிர்த் தொகுதியினைக் காவல் செய்யும் முறையானே முதன்மை அமைந்த சிங்காதனத்தின்கண் ஏறினான் என்று உரைகொள்ளின் எவர் மீதும் பழி போட வேண்டியது இல்லை.

வெற்றிவேற்செழியன் மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற் காலையில் முறைமுதல் கட்டில் ஏறினான் என்பது பொருந்தும். அவன் அரசேற வருமுன் இருந்த மதுரை நிலைமையைக் காட்டும் அடைமொழியே உயிர்ப் பலியிட்ட நிகழ்ச்சியாகும்.

டை

L

"வெற்றிவேற்செழியன்... அல்லற்காலை” என வெளிப்படுகின்றதே என்ற ஐயம் இலக்கியம் பயின்றோர்க்கு கிளைக்க மாட்ட ாது. ஏனெனில் இவ்வாறு இவ்வாறு வருவதற்கு எண்ணிறந்த சான்றுகள் உளவாதலை அறிவர். இவ்வாறு உரை கொள்ளாவிடின், பழிமிக்க ஒரு கொலையால் அரசனும் அரசியும் இறந்துவிட்ட நிகழ்ச்சியை அரியணை ஏறுமுன்னரே மறந்து ஆயிரவர்களை அறமற்றுக் கொன்றான் வெற்றிவேற் செழியன் என்ற பெரும் பழிக்கு ஆளாக நேரிடும். பாண்டியன் அத்தகைய பழிகாரனா? அன்று! அன்று! அவனைப் பழிகாரன் ஆக்கியது 'ஐ' என்னும் ஓர் உருபே. ஆதலால் ஆயிரம்பேர் கொலை ஓர் உருபின் கொலையேயாம்!

L