உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

வி

93

இங்குக் கூறியவற்றால் உரைபெறு கட்டுரை அடிகளார் எழுதியது அன்று என்றும், அக்கட்டுரை சிலப்பதிகார உரை ஆசிரியர் காலத்திற்கு முற்பட்டே எழுதப் பெற்று விட்டது என்றும், அது நீர்ப்படைக் காதை வரிகளைப் பிறழக் கருதிக் காண்டு கூறப்பட்டது என்றும், அப்பிறழ்ச்சியால் விளைந் தனவே பின்னைய உரைகாரர்கள் உரைகள் என்றும், பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்த பின் நாடு அல்லலுற்ற நிலைமையிலே வெற்றிவேற் செழியன் அரைசுகட்டில் ஏறினான் என்றும், அவன் வரு முன்னரே மதுரையிலே வாழ்ந்த பொற் கொல்லர் ஆயிரவர் கூடித் தம் இனத்தினன் புரிந்த பிழைக்குக் கழுவாயாக ஒரு பகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டினர் என்றும், இனங் கழுவேற்றல் பெரும்பழி என்றும், பாண்டியன் பழிகாரன் அல்லன் என்றும், அப்பழி ஓர் உருபால் விளைந்தது என்றும் ஒருவாறு கூறப்பெற்றன.

குறிப்பு : "கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொண்டு கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது. என்பதாயின் பிழை தவிர்க்கப் பெற்றதாம். கொண்டு என்பது கொன்று எனத் திரிவது ஏ டழுதுவோரால் நிகழத்தக்கதேயாம். இவ்வாறு கருதின் உரைபெறு கட்டுரைச் செய்தியும் தவறின்றாம். ஆனால், செழியன் தூண்டலால் கண்ணகியார்க்குப் பொற்கொல்லர் உயிர்ப்பலி ஊட்டியதாகப் பொருள் கொள்ள வேண்டிவரும்.

3. செங்குட்டுவன்

குட்டுவன் என்பது குடிப்பெயர்; செம்மை என்பது அடை மொழி. இவ்வடைமொழி வண்ணம் பற்றியதோ? தன்மை பற்றியதோ? இதனை ஆராய்வதே இக்கட்டுரை.

“செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே"

என்பது பண்புப் பகாநிலைச் சொற்கள் பற்றிய நூற்பா. இந்நூற்பாவிற்கு உரைவரைந்த பெருமக்கள் செம்மைக்குக் கருமை வெண்மை முதலியனவற்றை எதிர்ச்சொல் எனக் காட்டினர். வை இன்னவும்’ என்பதனுள் அடங்கும்.