உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கருமை முதலிய நிறங்கள் செம்மை போன்றனவே அன்றி எதிரிடையானவை அல்ல என்பது எவரும் அறிந்ததே. சிறுமைக்குப் பெருமையும், சேய்மைக்கு அண்மையும், தீமைக்கு நன்மையும் போலத் தன்மையால் எதிரிட்டவை அல்ல, கருமை முதலியவை. 'செம்மை'யின் எதிர்ச்சொல் 'கொடுமை: என்பதாம். செங்கோல் என்பதை அறிக.

செம்மையாவது நேர்மை; வளையாத் தன்மை.

“ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை

சிலப் - 15 : 120. 121.

என்பது அடிகள் வாக்கு. கோவலர் கைக்கண் உள்ள கோல் ஓரொருகால் அலைப்பது ஆகலின்,

"கொடுங்கோல் கோவலர்” - (முல்லைப்பாட்டு) என்கிறார் நப்பூதனார். இனி அவர் கைக்கோல் வளைவுடையது என்பதைச் சுட்டுவதுமாம்.

செம்மை செவ்விய தன்மையாம் நேர்மை ஆகலின், 'நடுவு நிலைமை என்பதாம். நடுவு நிலைமையாவது ஒரு பால் கோடாமை.

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி"

என்னும் குறள்மணி நடுவு நிலைமையை உவமையால் நன்கனம் வலியுறுத்தும். மேலும்,

“நெடு நுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சினோர்'

என்னும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வாக்கும்,

‘நுகத்துப் பகலாணி அன்னான்'

என்னும் பொய்யா மொழியார் வாக்கும்,

“செம்மையின் ஆணி'

என்னும் கம்பன் வாக்கும் காணத் தக்கன.

ஒருபால் சாயாத நடுவு நிலைச் செம்மை, 'செப்பம்’

6 எனவும் பெறும். செப்பம் உடை

உடையான் செவ்வியான்' எனப்

பெறுவான்.