உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்"

“செப்பம் உடையவன் ஆக்கம்”

என்றும்,

என்றும்,

என்றும்,

“செப்பமும்நாணும் ஒருங்கு"

"செவ்வியான் கேடும்"

என்றும் வரும் குறள்மணிகளைத் தெளிக.

95

நேர் கிழக்கைச் ‘செங்குணக்கு' என்றும், சரிவின்றி நிமிர்ந் தெழுந்துள்ள மலையைச் ‘செங்குன்று' 'செங்கோடு' என்றும், நேரிய கூரிய அம்பைச் 'செங்கோல் என்றும், நேரிய பார்வையைச் 'செந்நோக்கு' என்றும், இருவகை வழக்கினும் உண்மை காண்க. இவற்றை நோக்கச் ‘செங்குட்டுவன்’ என்பது செவ்விய நேரிய - நடுவுநிலை போற்றிய குட்டுவன் என்பது போதரும். அகச்சான்று காட்டின் அன்றோ ஏற்கும் எனின் காட்டுதும்.

(1) மதுரைச் சாத்தனார் மலை நாட்டுக்குச் சென்று செங்குட்டுவனைக் கண்டு கோவலற்கு உற்றதும், கண்ணகி வழக்கும், தென்னவர் கோமானும் தேவியும் பட்டதும், கண்ணகி மலைநாட்டுக்கு வந்ததும் ஆகிய செய்திகளை ஒழிவின்றி உரைத்தார். அதனைக் கேட்டவுடன்,

66

‘எம்மோ ரன்ன வேந்தற் குற்ற

செம்மையில் இகந்தசொற் செவிப்புலம் படலும் உயிர்பதிப் பெயர்ந்தமை உறுக வீங்கென

வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”

2-95-9

என்று செங்குட்டுவன் கூறும் உரைமணி அவன் செங்கோல் தெய்வத்திற்குத் தலை வணங்கித் தாழாத் தொண்மயற்றும் தனிப்பேரடியான் என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.

(2) மேலும், பாண்டியன் தான் செய்த பழிக்குக் கழுவாய், தானே தேடிக்கொண்டதை வியந்து பாராட்டும் செங்குட்டுவன்,