உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ் வளம்

16

ஆள்வோருக்கு உண்டாம் அல்லல்களைக் கூறுமுகந்தான் தன்செங்கோல் நாட்டச் சீர்மையைப் புலப்படுத்துகின்றான்.

மழைவளங் கரப்பின் வான் பேர் அச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்

என்பது அவன் வாக்கு.

(3) இனி, வடநாட்டின்கண் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நாவினைக் காவாக் கனகன் விசயன் முதலாயவர், தன்னாட்டு வேந்தர் இமயத்தில் இலாஞ்சினை பொறித்த நாளில் எம்போலும் வேந்தர் ஈங்கில்லை போலும்' என்றுரைத்த மொழியைத் துறவோர் வழியாகக் கேள்வியுற்ற செங்குட்டுவன், வடநாட்டின் மேற் படை கொண்டு செல்ல விழைந்திருந்தான். அவ்விழைவைப் ‘பத்தினிக் கற்கோள்' விரைந்து தூண்டிற்று. வஞ்சினங் கூறி வடநாட்டுச் செலவு மேற்கொள்கிறான் செங் குட்டுவன்.

வஞ்சினமாவது நெடுமொழி. 'இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்' (தொல். புறத். 24) என்னும் சிறப்புடையது வஞ்சினம். உயிரெனப் போற்றும் ஒன்றையோ பலவற்றையோ; சுட்டிக் கூறி வஞ்சினம் கூறப் பெறும் என்பதை இலக்கியம் கற்ற, எவரும் அறிவர். அவ்வாறாகச் செங்குட்டுவன் கூறும் வஞ்சின மொழி யாது?

கடவுள் எழுதவோர் கற்கொண்டல்லது வறிது மீளுமென் வாய்வாள் ஆகிற்

செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகென”

முழங்குகின்றான். 'குடிநடுக் குறூஉம் கோலை' எவ்வளவு கொடுமையாகக் கருதினான் செங்குட்டுவன் என்பதை விளக்க வேறு சான்று வேண்டுவ தின்றாம்.

(4) இனிச் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவினை மேற் கொண்டு கங்கைக் கரைக்கண் இருந்த காலையில், தென் னாட்டினின்று போந்த மாடலன் என்னும் மறையோன் பாண்டி