உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

97

நாட்டு நிலைமையையும், சோணாட்டுச் செய்தியையும் தானே விரித்துரைக்கின்றான். பொழுது போய பின்னர்ச் செங்குட்டுவன் மாடலனை மீண்டும் தானே அழைத்து,

இளங்கோ வேந்தன் இறந்த பின்னர்

வளங்கெழு நன்னாட்டு மன்னவர் கொற்றமொடு செங்கோற் றன்மை தீதின் றோவென

வினவுகின்றான். தன் மைத்துன வளவனுக்கு இருந்த தாயவுரிமைப் போரைத் தகர்த்து அரசாக்கி நிறுத்தியவன் செங்குட்டுவன். அச்செயல் முடித்த பின்னர் வடநாட்டுச் செலவு மேற் கொண்டான். ஆகலின் அச் சோணாட்டுச் 'செங்கோற்றன்மை தீதின்றோ' என வினாவுகின்றான்.

எந்

இவ்வினாவினால் தன்னாட்டில் மட்டுமன்றி நாட்டிலும் செங்கோற் றன்மை சீருற விளங்க அவாவியன் செங்குட்டுவன் என்பது விளக்கமாம்.

(5) செங்குட்டுவன் மலை வளங் காணச் சென்ற காலையில் ‘ஏழ்பிறப்படியோம் வாழ்க நின் கொற்றம்' என வீழ்ந்து வணங்கிய குன்றக் குறவர், “கான வேங்கைக் கீழ் நின்ற காரிகை வானம் போகிய" இறும்பூது நிகழ்ச்சியைக் கண்டவாறு கூறினர். கலங்கி நின்ற அக்காரிகை சேரர் நாட்டகத்து இவ்வாறு ‘அல்லற்பட்டு ஆற்றாது’ அழுங்குவார், இலர் என்று உறுதியாகக் கருதினர். ஆகவே, அழுங்குவார் இலர் என்று உறுதியாகக் கருதினர்.

66

'எந்நாட் டாள் கொல் யார் மகள் கொல்லோ

நின்னாட் டியாங்கண் நினைப்பினும் அறியோம்”

என்றனர். குன்றுவாழ் மக்களே கோன்முறை கோடாக் கேண்மை தம் நாட்டில் நிகழ்வதாகக் குறிக்கொண்டு வாழ நெறிப் படுத்திய காவலன் செங்குட்டுவன் என்னின் அவன் செங்கோல் சீர்மை என்னே!

(6) வஞ்சி மூதூரில் மகிழ்ந்திருந்தான் குட்டுவன். அப் பொழுது எழுந்த முழுமதியைக் கூறவந்த அடிகட்குக் குட்டுவன் குடிபுறந் தரும் கோன்மையே முன்னின்றது ஆகலின்,

“முடிபுறந் தருங்கால் திருமுகம் போல

உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்”

என்றார். செங்குட்டுவன் குடி புறந்த உம் செங்கோன்மையை விளக்கும் உவமையாகலின் கருதத் தக்கதாம்.