உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

99

'மணிவண்ணன்' என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. ‘மணி' ஆண்டுச் செம்மணியாமோ? அது கருமணியாம்! 'கருமணியைக் கண்டு கொண்டேன், “கருமணியைக் கோமளத்தை என்பது ஆழ்வார் உரை மணிகள். 'கருமணியிற் பாவாய்' என்பது வள்ளுவர் வளமணி. ஆகலின் ‘மணி’ செம்மணி என்றே கோடல் சால்பன்று; இடத்தையும் பொருளையும் கருதி ஏற்ற பொருள் தருவதாம் அது. அவ்வாறாகக் குட்டுவனின் உடன் பிறந்தாராய அடிகளாரோ உழுவலன்பராய சாத்தனாரோ தன் மைந்தன் குட்டுவன் சேரற்கு நல்லாசிரியராகத் தேர்ந்து கொண்ட ஐந்தாம் பத்துப் பாடிய பரணரோ செங்குட்டுவன் நிறத்தை அடைமொழியால் கூட - உவமையால் கூட காட்டினர் அல்லர். செங்கோற்றன்மையைச் செம்மாந்து பல் கால் பாராட்டியுள்ளனர். ஆதலால் செங்குட்டுவன் நிறம் செம்மை கருமை இவற்றுள் யாதாயினும் ஆகுக! அஃதவற்குப் பெருமை தரும் ஒன்றன்று. அவன் செங்கோன்மையே உண்மைச் சான்றுடை யதும் பெருமை மிக்கதும் ஆம் என்க.

இட

நிற அடை என்றால் தான் அவன் பிள்ளைமைப் பருவத்தே டம் ம் பெற்றிருக்கக் கூடும். தன்மை அடை எனின் அரசேற்று நாடெல்லாம் செங்கோற்றன்மை பெருகப் பரவிய பின்னரே ஏற்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணிப் பார்க்க வேண்டுவதும் முறைமை. அதற்குத் தக்க குறிப்பொன்றும் உள்ளது.

பதிற்றுப்பத்தில் உள்ள ஐந்தாம் பத்து பரணரால் பாடப் பெற்றது. செங்குட்டுவன் ஐந்து இடங்களில் 42, 43, 45, 47, 49, குட்டுவன் என்றே குறிக்கப் பெற்றுள்ளான். செங்குட்டுவன் முற்பகுதி வரலாற்றைக் கூறுவது சிலப்பதிகாரம் என்பதும், இவ்விரண்டையும் தொகுத்துச் சுட்டுவது பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகம் என்பதும், 'கிழவர் இளங்கோ' என்னும் எம் 'சிலப்பதிகார ஆராய்ச்சி’ முதற்கட்டுரைக் கண் குறிக்கப் பெற்ற செய்தி இவண் நோக்கத் தக்கதாம்.

குட்டுவன் என்னும் குடிப்பெயர் தாங்கியவன் தன் செங்கோற் சீர்மையால் செங்குட்டுவன் ஆகிப் புலவர் பாடும் புகழாளனாகத் திகழ்ந்தான் என்பது உறுதியாம். காந்தி என்று அழைக்கப் பெற்ற பெரியார் பின்னை நாளில் ‘மகாத்மா காந்தி’ என்று போற்றப் பெற்றமை கண்கண்ட சான்று அன்றோ!