உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

101

தண்டமிழ் ஆசானைக் கண்களி மயக்கக் காதலர் ஆக்கினவா? திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் முதலாக அளவற்ற அரும்பொருள்களைச் சேரவேந்தன் திருவடிகளில் படைத்து, “ஏழ்பிறப்படியோம்; நின் கொற்றம் வாழ்க” என்று வாழ்த்திய குன்றக் குறவர்தம் கூற்றும். செய்கையும் தோற்றமும் பிறவும் கூலவாணிகரைக் கண்களி மயக்கக் காதலர் ஆக்கினவா?

இவ்வனைத்தும் சாத்தரைக் களிப்பூட்டி இருக்கலாம் மயக்கமோ காதலோ ஊட்டியிருக்க மாட்டா. மலை நாட்டை முதன்முதலாக இப்பொழுதுதான் அவர் காண்கிறாரா? செங்குட்டுவன் சீர்மையை இப்பொழுதுதான் நேரிடையாக நோக்குகிறாரா? இளங்கோவடிகளின் கெழுதகை உழுவலன்பினர் சாத்தனார். ஆகலின் இச்சேர நாட்டுச் செலவு முதன்முறையாக இருந்திருத்தற் கியலாது. ஆதலால் இக்காட்சிகள் சாத்தரைக் களிப்புறச் செய்தவை ஆகலாமே அன்றி, 'மயக்கக் காதல்' ஊட்டுபவையாக மாட்டா.

66

குன்றக் குறவர் செங்குட்டுவனை வணங்கி எழுந்து.

கான வேங்கைக் கீழோர் காரிகை

தான்முலை இழந்து தனித்துயர் எய்தி வானவர் போற்ற மன்னொடும் கூடி வானோர் பேற்ற வானகம் பெற்றனர்”

என்று தாம் நேரில் கண்ட நிகழ்ச்சியைக் கூறினர். இதனைச் சாத்தனாரும் கேட்டார்.

கொற்றவன் தவறிழைத்ததும், கோவலன் மாண்டதும், கண்ணகி வழக்குரைத்ததும், அதன் விளைவும் மதுரையில் கண்டு அறிந்தவர் சாத்தனார். கண்ணகியார் கோவலர் இவர் தம் முன்னைச் செய்தியைக் கேட்டும் அறிந்தவர் அவர். ஆனால் கண்ணகியாரின் பின்னைச் செய்தி இன்னதென அவர் அறியார். ஆகலின் கண்ணகியார் கணவனுடன் கட்புலம் காண விட்புலம் போய செய்தியைக் குன்றக் குறவர் கூறக் கேட்ட அவர் கண்ணகியாரின் தெய்வ நிலையை எண்ணி எண்ணி மயக்கம் கொண்டார். காட்சியால் கண்களி கொண்ட அவர் கண்ணகியாரின் பழுதறு வரலாற்றை முழுதுற அறியும் வாய்ப்புக் கிட்டிய அளவில் கண்களி மயக்கத்தினர் ஆனார்.

கண்ணகியாரைப் பற்றிய செய்தியைக் குன்றக்குறவர் செங்குட்டுவனிடம் உரைத்த காலையில் அவரை,