உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் பொருள்

103

மன்னர் அவையிலும், கற்றறிந்தோர் மையத்திலும் வாழும் புலவரொருவர் தம் புரவலனை நோக்கிச்,

“சோறு படுக்கும் தீயொடு

செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது

பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வோரே

திருவில் அல்லது கொலைவில் அறியார்

நாஞ்சில் அல்லது படையும் அறியார்" (புறம் 20)

என்று நயந்து பாராட்டுவதிலும், ஆள்வோர் தொடர்பென்பது அறியாமல், அறிவறிந்த கல்வியும் பெறாமல், காடுமலைகளில் வாழும் எளிய மக்களும் அல்லற்பட்டு நிற்பாளைக் கண்டு, எந்நாட்டாள் கொல், இந்நாட்டியாங் கண் நினைப்பினும் அறியேம்' என்று வினவுமாறு ஒரு நாட்டின் ஆட்சி நடைபெறும் ஆ என்றால், அவ்வாட்சி அன்றோ உலகம் எடுத்துக் காட்டாகக் கொள்ளத் தக்க ஆட்சி. அவ்வாட்சியைக் கண்டு உலகம் கண்களி மயக்கம்கொள்ளும் காலம் வருமா? வாழ்க கண்களி மயக்கக்

காதல்!

5. போற்றா ஒழுக்கம்

கண்ணகியாரொடு மதுரைக்கு வந்த கோவலன், சிலம்பு விற்கப் புறப்படுவதற்கு முன், தன் குறைபாடுகளையெல்லாம் நெஞ்சாரக் கூறி நெகிழ்கின்றான். அந்நிலையில் கண்ணகியார், "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்" என்று சுட்டுவதைக், குறை போலாகக் கூறுவார் உளர். அதனைப் பற்றிக் கருதுவது இது.

தன் பிழையுணர்ந்து வருந்தும் கணவனிடம், “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்பது கற்புக் கண்ணகியார்க்குத் தகுமா? இது திருந்தியவனை வருந்த வைக்கும் மொழியாயிற்றே” எனக் குறை காண்கின்றனர்.

கண்ணகியார் தனித்து உறைதலை உணர்ந்த கோவலன் தாய் தந்தையர், உள்ளகம் வருந்தினர். அவர்கள் உள்ளகம் வருந்துதல் ஆற்றாத கண்ணகியார், தாம் வருந்தவில்லை என்பதைக் குறிப்பது போல் “வாயல் முறுவல் செய்து” வாழ்ந்தனர். அதனைக் குறிக்கும் வகையாலேயே, அவர், “உள்ளகம் வருந்தப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்றார். இதில், தம் உள்ளகம் வருந்திய குறிப்போ - வருத்திய குறிப்போ - இல்லை!