உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கண்ணகியார் வாயல் முறுவல் செய்தலைப் பட்டறிவும் பழுத்த அறிவும் ஒருங்கமைந்த மாமன் மாமியார் உணர்ந்து கொள்ளமாட்டார்களா, என்ன? அதனால், அவர்கள் உள்ளகம் வருந்தவே செய்தனர்; அதனையே குறித்தார் கண்ணகியார். ஆதலால், அவர் மேல் குறை காண இடமில்லை.

இனிப், "பெற்றோர்க்காகவே எனினும், கலங்கியும் கவன்றும் கரைந்தும் நிற்கும் கணவனிடம் இவ்வாறு கூறலாமா?" என அடுத்துத் தொடுப்பாரும் உளர். அவர்கள் “போற்றா ஒழுக்கம் என்பதன் மரபு வழிப் பொருளை உணர்ந்து கொண்டால் இதனைக் குறையாகக் கருதார்.

போற்றா ஒழுக்கம் என்பதற்குப் பேணிக் காவாத குற்றம், பிறர் போற்றிக் கூறத் தகாத தவற்றொழுக்கம், பரத்தமை என்றெல்லாம் பொருள் கண்டு இவ்வாறு கூறுகின்றனர்.

"போற்றா ஒழுக்கம்" என்பதற்கு அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறினர் அல்லர். ஒன்றுக்கு மூன்று முறை "போற்றா ஒழுக்கம்” என்றே கூறியமைந்தனர். இதன் பொருள் என்ன?” இத்தொடர்க்குப் பொருள் கூற வேண்டிய தேவை இல்லை; புலவர் உலகம் இத்தொடரின் பொருளை வெட்டவெளியாக அறியும்” என்பதே பொருளாம்.

இப்போற்றா ஒழுக்கத் தொடர் கொலைக்களக் காதையை அன்றி, வரந்தரு காதையிலும் வருகின்றது. ஆங்கும் அரும்பத உரையில் பொருள் இல்லை. அடியார்க்கு நல்லார் உரையோ கிடைக்கவில்லை! ஆதலால் ஆங்கும் இதே நிலைதான்!

வரந்தரு காதையில்,

'புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்

நிகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்"

என்பது. இது கண்ணகியாரின் தாயார் கூற்றாக வருவது. தவறு சுட்டும் பொருளாக இஃதிருப்பின், கண்ணகியின் தாய் கூற்றாக - மாமியார் கூற்றாக- இடம் பெறல் உண்டா, மரபுவழி உரிமை சிறிதும் பழித்துரைக்க இடந் தராதாம் என்பதைத் தமிழியலும், தமிழர் வாழ்வியலும் அறிந்தார் நன்கு கண்டு கொள்வர்.

பழி சுட்டாததாக இருந்தும், பழிச்சுட்டாகக் கொள்ளப் படலான இத் தொடரின் பழம் பொருளைக் கலித்தொகைத் தொடரொன்று கைந்நீட்டி அழைத்துக் காட்டித் தெளி விக்கிறது. (133)