உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

‘போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை”

என்பது அது.

105

ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை, என்பவற்றைத் தொடராகக் கூறி விளக்கும் இப்பாடலில், போற்றுதல் என்பதன் பொருள் விளக்கம் கிடைக்கின்றது. இத்தொடர்க்கு “ஒன்றைப் பாதுகாத்தல் என்று சொல்வது, கூடினாரைப் பிரியாதிருத்தலை" என்று பொருளுரைக்கிறார் நச்சினார்க்கினியர்.

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை எனின், போற்றாமை என்பது புணர்ந்தாரைப் பிரிந்தமை தானே! “நீர் பிரிந்தீர்" என்பது தவறான செய்தியா? மயக்கம் தீர்க்க மரபு வழி உரை காணும் முறையைப் போற்றுதல் வேண்டும் என்று இப் போற்றா ஒழுக்கம் சுட்டுவதாகக் கொள்ளலாமோ?

6. கண்ணகியாரும் செல்லத்தம்மனும்

மதுரை மாநகரின் வடக்கு வெளிவீதியில் 'சிம்மக்கல்’ என்பதோர் இடம். அவ்விடத்தில் 'சிம்மக்கல்லுரு' உள்ளது. முன்பு அது, தென்பால் நோக்கியிருந்து, இதுகால் வடபால் திருப்பி வைக்கப்பட்டுள்ளது.

தென்பால் திரும்பியிருந்த காலை அதன் முன் பார்வையில் இருந்த திருக்கோயில், செல்லத்தம்மன் கோயில்; இப்பொழுது பின்பார்வையில் அமைந்துவிட்டது.

செல்லத்தம்மன் கோயில் வடக்குப் பார்த்தது. பழமைச் சின்னமுடையது. அங்கே ‘கண்ணகி' என்னும் பெயர் எழுதி வைக்கப்பட்ட கல்லுரு உள்ளது. அதனை அடுத்து, யம்மன்’ உள்ளது.

டைச்சி

செல்லத்தம்மன் கோயில், 'கண்ணகி கோயில்' என்பது ஊர் சொல்லும் செய்தி! உண்மைச் செய்தியா? சான்று உண்டா? ளங்கோவடிகள் வாக்கே அகச்சான்று!

'சிலம்பின் வென்ற சேயிழை' கண்ணகியார்! கண்ணகி என்று சொல்லப்படும்; சிலையில் சிலம்பு உண்டா? ‘ஆம்’ கண்ணில் காட்சி எழில் கவினி நிற்கக் கண்ணகியார் கையில் தனிச்சிலம்பு உள்ளது!

“செம்பொற் சிலம்பொன்று கையேந்தி”

(19, 23)