உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ் வளம்

16

‘கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்'

66

66

'காவியுகு நீரும் கையில் தனிச்சிலம்பும்”

(20:வெண்பா 2)

(20.00TLIT 2)

66

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

(20;27):

(20:42)

“பொற்பொழிற் சிலம்பொன் றேந்திய கையன்

என்று அடிகளார் கூறும் சிலம்பு, அம்மையார் கையகத் துண்மை கண்ணகம் நிறைகின்றது. இது பிறிதின் கிழமைச் சான் சான்று. மற்றொன்று;

கண்ணகியார் காது, வீழ் காது! வடிந்து வீழ் காது; கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காது; மும்மடி அடையால் நம்மடிகளார், கண்ணகியார் காதெழிலை வடித்துக் காட்டுகிறார். வடிதல் - தொங்குதல்! வீழ்தல்- தட்டி வழிதல்; நீர் வீழ்ச்சியால், வீழ்' அறியலாமே! ஆலம் வீழ்து அறியாததா? வளைந்து திரண்ட காதணிகளைத் துறந்தும் கூட வடிந்து வீழும் காது! ஆம்! அடிகள் உணர்வை அப்படியே வாங்கிக் கொண்டு, அவர் திருவடிப் பொடியைச் சூடிய கலைவல்லான் அடிகள் சொல்லை, அப்படியே கல்லில் வடித்திருக்கிறான்! வடிந்துவீழ் காதைப் பார்க்க வேண்டுமா? "வாருங்கள் மதுரைச் செல்லத்தம்மன் கோயிலுக்கு” என்று சொல்லாமல் சொல்லி அழைக்கின்றான்;

கண்ணகியார் பக்கத்தே இருக்கும் 'இடைச்சியம்மன்’ எவர்? உணர்ந்த மக்கள் எவ்வளவு உணர்வோடு போற்று கிறார்கள் என்பதற்கு ‘இடைச்சியம்மைப்' பெயரே சான்று! கண்ணகிக்கு அடைக்கலம் தந்தவர் எவர்?

“கோவலர்” குடியில் வந்த மாதரியம்மை! அவரோ தீதிலள்; முதுமகள் செவ்வியள் அளியள்

99

எனப் பண்பியல் பட்டங்களைப் பாரிக்கப் பெற்றவர்!

பண்பியல் பட்டங்களைத் திட்டமிட்டுத் தீர்மானித்து தந்தவரோ, முடிகெழு வேந்தன் உடன்பிறந்தும், நாடு நகர் துறந்தாலும் நற்றமிழ் துறவாத் தூய துறவி இளங்கோவடிகளார்! அதனை, வழங்குகின்ற அருமையாட்டியோ, மறந்தும் புறந் தொழா அருகசமயத் தவமூதாட்டி கவுந்தியடிகள்! நேரில் வழங்கினால் நாணத்தால் பெற மறுப்பார் ‘மாதரியார்' என்று நெஞ்சத்தால் வழங்குகின்றார்! அடைக்கலமாகக் கண்ணகியையும் வழங்குகின்றார்! எப்படி?