உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

“இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்”

107

(15: 130)

அடைக்கலம் பெற்றவர் நிலை என்ன ஆயிற்று? கொடுமை கொடுமை!

66

அடைக்கலம் இழந்தேன் இடைக்குலமக்காள்

என்று கரைந்துருகி,

"இடையிருள் யாமத்து எரியகம் புகுந்தார்”

(27; 77-8)

இடைச்சியம்மையை இவரென இன்னும் விளக்க வேண்டுமா?

கோவலனைத் தம் மகனாகக் கருதினார் கோவலர் குடி மூதாட்டி மாதரி. தன் மகள் ஐயையைக் கண்ணகியார்க்கு 'நாத்துணை' யாகத்தந்தார்! அடியார்க்கு நல்லார், 'நாத்தூண் நங்கைக்கு' விளக்கம் வரைகின்றார். “நங்கை என்று புதல்வர் மனைவியைக் கூறும் முறைப் பெயராதலின் நங்கை என்றாள் என்க” என்றும், "கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள்” என்றும் கூறுகிறார் (16:14: 19).

66

ஆய்ச்சியர் குரவைக்கு அடித்தளமானவர் மாதரி; கண்ணகி காண, கண்ணன் ஆயர்பாடியில் பிஞ்ஞை (நப் பின்னை)யோடு ஆடிய குரவையை ஆடி விளைந்த தீக்குறியைப் போக்க முனைகின்றார். ஆயர் குடி வழிபாடு மாயோன் வழி பாடே! "மாயோன் மேய காடுறை உலகம்" ஆய்ச்சியர் குர வைக்கும் முல்லைப் பாணிக்கும் முறைமையுடையவே அல்லவோ; பின்னே குரவையாடும் மாதரி, முன்னே தம் இல்லில் கோவலன் உண்ண, கண்ணகி படைக்கும் காட்சியை எப்படிக் காணுகிறார்?

66

'ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ! நல்லமு துண்ணும் நம்பி ஈங்குப்

பல்வளைத் தோளியும் பண்டுநம் குலத்துத் தொழுநை ஆற்றுள் தூமணி வண்ணனை விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லோ

எனக் காண்கிறார். மகனாகவும் மருகியாகவும் கண்ட மாதரியார், கண்ணனாகவும், பின்னையாகவும் கருதி விம்மிதம் அடைகிறார்! வழிபடு தெய்வமே விருந்து வந்ததாகக் களி துளும்பி ‘ஐயையும் தவ்வையும் விம்மிதம்' எய்துகிறார்கள்; “கண் கொளா நமக்கிவர் காட்சி” என்கிறார்கள். மாதரியார் காட்சி இவ்வளவில் நிற்க!