உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

66

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

பதிகம், கண்ணகியாரை எப்படி அறிமுகப்படுத்துகிறது? திருமாபத்தினி' என்கிறது (5). மங்கல வாழ்த்து, 'போதிலார் திருவினாளாகக்' காட்டுகிறது (25). மனையறம் படுத்ததோ, குழவித் திங்களுக்கும், மூவாமருந்துக்கும் உடன் பிறப்பாகக் கூறுகின்றது. இவளைத் திருமகளாக்கி அமிர்தின்முன் கூறப் பட்ட து என்றும், “இங்ஙனங் கூறினார் பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத் திருமகளாக மதித்து’ என்றும் முறையே அருஞ் சொல் உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் உரைத்தனர்.

وو

வேட்டுவச் சாலினியோ, “ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி" (12:49-50) என்றும், மாடலனோ, “திருத்தகு மாமணிக் கொழுந்து” (15, 93) என்றும் கண்ணகியைத் திருக் காட்சி காண்கின்றனர். மாடலன் கோவலனைக் ‘கோபாலன் என்றே விளிக்கின்றான். (15;93).

கோவலன் பிரிந்த புகார், இராமன் பிரிந்த அயோத்தியா கின்றது (13.65-6), “தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்த' இராமனே எடுத்துக் காட்டாக நிற்கின்றான்

(14, 46-7).

இவையெல்லாம் சுட்டுவதென்ன? கண்ணகி திருமகள் போல்வாராய்ப் பிறர்க்குக் காட்சி வழங்க, மாதரியார்க்கும் ஆயர் குடியார்க்கும் திருமகளாகவே காட்சி வழங்கினாராம். ஆதலால் இடைச்சியம்மைக்கும் அடைக்கலம் தந்த ஆயர் குடியார்க்கும் செல்வத் தம்மையாகக் கண்ணகியார் திகழ்ந்தாராம். 'செல்வத் தம்மை' திருமகளல்லரோ?

'செல்வத் தம்மை, செல்லத்தம்மை யாகுமா? செல்வம் கொடுத்தல்' ‘செல்லங் கொடுத்தலாக' வில்லையா? 'செல்வம்’ என்பாரைச் 'செல்லம்' என வழங்குவதில்லையா? செல்லாயி, செல்லப்பன், செல்லம்மை! செல்லாண்டி, செல்லியம்மை வையெல்லாம் வழக்கில் இல்லாதவையா?

6

இடைச்சியம்மையும் அவர் வழியினரும் செல்வத் தம்மையாகக் கண்ணகியாரைக் கண்டு வழிபட்ட சொற் கோயில்' சிலம்பு என்றால், 'கற்கோயில்' செல்லத்தம்மன் கோயில்!' அக்கோயிலை அடுத்திருப்பவை இராமாயணச் சாவடி; பெருமாள் கோயில்; ஆயர் பெருமக்கள் குடியிருப்பு. இத்தொடர்புகள் இயல்பாய் அமைந்திருக்கவும் முடிவு செய்யவோர் இடரும் உண்டோ?