உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

7. மங்கல வாழ்த்துப் பாடலின் மாண்பு

109

முடிகெழு வேந்தர் மூவருக்கு முரிய முத்தமிழ்க் காவியத்தை முறை வழுவாமல் இயற்றிய பெருமை இளங்கோ வடிகட்கு உண்டு என்பது நாடறிந்த உண்மை. மூவேந்தரையும் ஒப்ப மதித்துப் பாடிய உயர்வே அன்றிச் சமயக் கோட் பாட்டிலும் நடுவுநிலை நின்று அவ்வவர்க்கு அவ்வவர் சமயத்தராய்த் தோன்றித் தமக்கென எல்லோருக்கும் ஒப்பும் பொதுச் சமயத்தினைக் கொண்ட பெருமையும் அடிகட்கு உண்டு. இது நூலில் பரந்து பட்டுக் காணக் கிடப்பினும் எடுத்த எடுப்பிலேயே - மங்கல வாழ்த்துப் பாடலிலேயே நிலை நாட்டி விடுகின்றார் அடிகள்.

மங்கல வாழ்த்துப் பாடத் தொடங்கிய அடிகள் இருவகை மங்கல வாழ்த்துகளை நம் முன்னர் வைக்கின்றார். முன்னது தங்கூற்றாகக் கூறும் மங்கல வாழ்த்து; அஃது இயற்கைப் பொருள்களைக் கொண்டு, இறை உண்மை நிலை நிறுத்தும் தொன்மைத் தமிழ்ச் சமயத்தின் உயர் கோட்பாட்டை விளக்குவது. பின்னது ‘கொடியன்னார்' கூற்றாகக் கூறும் மங்கல வாழ்த்து. அது, கோவல கண்ணகியரை மங்கல அமளியிலே ஏற்றி வைத்து மலர் தூவி வாழ்த்தும் திருமண வாழ்த்தாய் அந்நாளைத் தமிழக நிலைமையை நிறுவுவது. இவ்விரண்டு வாழ்த்துகளையும் உடைமையால் முதற்பகுதி மங்கல வாழ்த்துப்பாடல் என்னும் பெயர் பெற்றதாகும்.

மங்கல வாழ்த்துப்பாடும் அடிகள் திங்கள், ஞாயிறு, மழை, பூம்புகார் ஆய நான்கினையும் முறையே வாழ்த்துகின்றார். இம் முறை வைப்பிற்குத் தக்க காரணம் ஏதேனும் இருத்தல் இன்றி யமையாததாம். ஞாயிற்று வணக்கமே மக்கள் வழிபாட்டில் முதன்மை பெற்று நிற்கின்றது. ஞாயிற்றுக்கிழமையே முதற் கிழமை என உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அறிவியல் உலகமும், ஞாயிற்றினின்று பிரிந்து வந்த கூறுகளே திங்கள் முதலாய அண்டங்கள் என்று ஆய்ந்துரைக்கின்றது. பண்டை புலவர்கள் பலரும் ஞாயிற்றுக்கு முதன்மை தந்ததுடன், ஞாயிற்று வணக்கம் உண்மையையும் கூறியுள்ளனர். எனினும் ஞாயிற்றை முன்னாகக் கூறாது அடிகள் திங்களை முதற்கண் வைத்துப் போற்றியதன் உட்கிடை என்ன என்பதை நுணுகிப் பார்த்தல் வேண்டும்.

6

ப்

அடிகள் உள்ளத்தே கண்ணகியார் நீங்கா இடம் பெற்று விட்டார். மனித நிலையோடு பிறந்து தெய்வநிலை எய்தும்