உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

அக்

அளவுக்கு இடம் பெற்று விட்டார். அத்துணைப் பெருமையினைக் கோவலனோ, பிறரோ எய்தி விட முடியவில்லை. காரணத்தாலேதான் கண்ணகியார் காற்சிலம்பினையே, நூற் பெயராகக் கொண்டு காவியம் இயற்றினார். பதிகம் இயற்றியவரும் "சூழ்வினைச்சிலம்பு காரணமாக, நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று நூல் யாக்கப் புகுந்தார் அடிகள் என்றே கூறினார். இவ்வாறு சிலம்பினை முதலாகக் கொண்டு அடிகளார் எழுதிய ஒன்றே கண்ணகியார் சிறப்புக்குத் தக்க சான்றாக இருத்தல் உண்மையாகவும் வெளிப்படையாகவே கண்ணகியாருக்கு மங்கல வாழ்த்துக் காதையிலே முதன்மை தந்து விடுகின்றார் அடிகள்.

கோவல கண்ணகியரை அடிகள் அறிமுகப் படுத்தி வைக்கும் போது கண்ணகியாரைத் தான் நம்முன் கொண்டு நிறுத்துகின்றார்.

“மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈரெட்டாண்டகவை யாள்; பெயர் மன்னுங் கண்ணகி என்பாள்

என்று பாடுகின்றார். இதன் பின்னரே கோவலனைக் கொண்டு வந்து நிறுத்தி,

“வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டாண்டு அகவையான் கோவலன் என்பான்

என்று பாடுகிறார்.

பெண்ணை முற்படக் கூறவேண்டும் என்றோ ஆணை முற்படக் கூறவேண்டும் என்றோ வரன்முறை ஒன்றும் இல்லை. இருபாலரும் ஒப்ப மதித்து வாழ்ந்த பழந்தமிழ்ப் பண்பாடு வ்வேற்றுமைக்கு இடம் அளிக்காது. எனினும் அடிகள் கண்ணகியாரை முற்படக் முற்படக் கூறியது அவர் உள்ளத்தே கண்ணகியார் தெய்வக்கோலம் காட்டியமையாலே தான். கோவலன் கள்வனல்லன்; என் காற்சிலம்பினைக் கவரும் பொருட்டால் கொன்ற காவலனே கள்வன்" என்று நிலை நாட்டிய தீதுதீர் சிறப்பால் கண்ணகியாரை உள்ளுற எண்ணினார். தனை எண்ணித் திளைத்தவருள் முதல்வராக அறியப் படுகின்றார் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். அவர் இவளை முற்கூறிற்று; கதைக்கு நாயகியாகலின்” என்றார்.

66