உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ் வளம்

16

ங்குக்காட்டிய சான்றுகள் அனைத்தும், தலைவன் தலைவியரை ரு சுடர்க்கும் ணையாகக் காட்டுவதைத் தெளிவாக்குகின்றனவே அன்றித் தலைவன் இச்சுடர், தலைவி இச்சுடர் என்று காணுமாறு இல்லை. ஆயின் தலைவன் எச் சுடர்க்கு நிகராவான்? தலைவி எச்சுடர்க்கு நிகராவாள்?

உலகைக் காத்து வருவன இரண்டாம். அவை தண்மையும், வெம்மையும் ஆம். தண்மைக் கூறே இல்லாப் பொருளோ, வெம்மைக்கூறே இல்லாப் பொருளோ உய்யா; பயன்படா; அதுபோல் உயிர் தாங்கும் மனித வாழ்வும் வெம்மையும் தண்மையும் இன்றிப் பயன்படாது. மாந்தர் உடல் வெப்ப தட்ப நிலைச்சமன்பாட்டில் மிகினும், குறையினும் ஊறுபட்டு அல்லல் உறுத்துவதை எவரும் அறிவர். ஆகலானே தான் உடலைத் தக்கவாறு பேணி, வெப்ப தட்பக்கூறுகளை ஒரு நிலையில் வைத்தல் தேவை. வெப்ப தட்பச் சமனிலை அமையா உடல் உடலன்று. இச்சமனிலை அமையாத் தனி வாழ்வும், கூட்டு வாழ்வும் வாழ்வு ஆகா.

·

பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாகக் கொண்ட காண்டவன் தீதற விளங்கும் திகிரியோன் என்னும் பெருந்தேவனார் வாக்கும், "சுட்டும் சுடர்விழிதான் - கண்ணம்மா ! சூரியசந்திரரோ?” என்னும் பாரதியார் வாக்கும் ஞாயிறும் திங்களும் தெய்வத் திருக்கண்களாகக் குறிப்பிடுவதைக் கண்டறிக. “தண்மையொடு வம்மைதான் ஆயினான்" என்னும் என்னும் திருநாவுக்கரசர் திரு வீழிமிழலைத் தேவாரத் திருமொழி இதனை விளக்கி நிற்கின்றது அன்றோ! வெம்மையும் தண்மையும் கலந்து நிற்கும் இறைவனை அம்மையே அப்பா” என்றும், “அம்மையுமாய் அப்பனுமாய்" என்றும் கரைந்துருகிக் கண்ணீர் சிந்தி ‘அன்பர்கள்’ அழைப்பதை அறியார் யார்?

66

வெம்மையாய்

தண்மையாய்

ரு

இரண்டுமாய் நிற்கும் இறைவனை எய்த, மாந்தருக்கும் அத்தன்மைகள்

வேண்டற்பாலவாம்.

மக்களுள் வெம்மைத் தன்மையோடு விளங்குபவர் யாவர்? தண்மைத் தன்மையொடு இலங்குவர் யாவர்? முறையே ஆடவர் பெண்டிர் அல்லரோ? ஊக்கமிக்க ஆண்மைக்கு வெம்மையும், உள்ளன்பு மிக்க பெண்மைக்குத் தண்மையும் இயல்பாய் அமைகின்றன அல்லவா! இதற்கு ஏற்ப, வெம்மையாம் ஆண்மை தண்மையாம் பெண்மையை விரும்பி நிற்பதன்றே திருமணம்! வெம்மையும் தண்மையும் ஒருங்குகூடி, ஒப்பநின்று ஒல்லும்