உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

113

வகையால் கடனாற்றி இல்லறம் இனிது காத்து இறுதியில் பெண்மைப் பிழம்பாக அமைவது அன்றோ கடப்பாடு! இதற்கு வழியென்ன? திருமணத்தின் பெயரால் ஆடவர் பெண்டிரை ஒன்றித்து வைத்தல் வேண்டும். இதுவே மங்கலம். இதற்குரிய வாழ்த்தே மங்கல வாழ்த்து!

மங்கல வாழ்த்தில் இயற்கை வடிவாய் இறைவனை முன்னிறுத்திச் சமயப் பொதுமையைக் காட்டும் அடிகள், தலைவன் தலைவியர் தன்மைக்கு இணையாய கதிர்களை எடுத்துக் கொண்டார். இஃது இயற்கை வாழ்த்தாக வாழ்த்தாக அமைந்து விடுகின்றது. “மணம்” இயற்கை தானே!

-

மண

இதுநிற்க, இருசுடர்க்கு இணையாய்க் கோவல கண்ணகியரை L மனையறம் படுத்த காதையில் பொதுவாகக் கூறும் அடிகள் வஞ்சின மாலையிலும், ஊர்சூழ் ஊர்சூழ் வரியிலும் சிறப்பாகக் குறிப்பிட்டு உரைப்பவை நோக்குதற்குரியவையாம்.

கோவலன் கொலை நிகழ்ச்சியைக் கேட்டறிந்த கண்ணகியார் பொங்கி எழுந்தார்; புவியிடை வீழ்ந்தார். அவ்வீழ்ச்சி,நிலவினைப் பொழியும் திங்கள் கரியமுகிலோடும் பெரிய நிலத்தின்கண் வீழ்ந்தது போலாயிற்று. (18; 30.1) இதன் பின், மதுரை மக்கள் சிலர், கொலையுண்ட கோவலனைக் கண்ணகியாருக்குக்

காட்டுகின்றனர். கண்ணகியார் காணுகின்றார். ஆனால் கவலையே உருவாய கண்ணகியாரைக் கதிரோன் காண மாட்டானாய்த் தன்கதிர்களைச் சுருக்கிக்கொண்டு உலகுக்கு இருள்ஊட்டி மலையிடை மறைகின்றான். (19-30-2).

கண்ணகியார் மண்ணிடை வீழ்ந்து புரள்வது திங்கள் வீழ்ந்து புரள்வது போன்றது என்று வஞ்சின மாலையிலே காட்டும் அடிகள், ஊர்சூழ் வரியிலே கோவலன் மறைவைக் கதிர் மறைவுடன் இணைத்துக் குறிப்பிடுகிறார். இவை, அவர் கண்ணகியரைத் திங்களுக்கும், கோவலனை ஞாயிற்றுக்கும் இணையாகக் கொண்டமையை நிறுவத் தக்க அகச் சான்றுகள் ஆதற்குத் தக்கவையாம்.

கண்ணகியரை முற்பட அறிமுகப் படுத்துகின்றார் அன்றோ அடிகள்! அதற்கேற்பத் தண்சுடராம் திங்களை முற்பட வாழ்த்தினார். கோவலனைப் பிற்பட அறிமுகப்படுத்தி வைப்பது போன்று வெங்கதிராம் ஞாயிற்றைப் பிற்படக் கூறினார். இவை மேற்போக்கில் திங்கள் ஞாயிறெனத் தோற்றினாலும் ஊன்றி உணர்வார்க்குப் புலமை நலங்கனிந்த வாழ்த்துகளாக

அமைந்துள்ளன.