உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

திங்களையும் ஞாயிற்றையும் மங்கல வாழ்த்துப் பாடலில் போற்றிய அடிகள், அவற்றை அடுத்து மழையையும் இறுதியில் புகாரையும் போற்றுகின்றார். திங்களையும் ஞாயிற்றையும் அடுத்து மழையைப் போற்றியதற்கும், அதன்பின் புகாரைப் போற்றியதற்கும் செவ்விய காரணங்கள் உளவாதல் வேண்டும். ஏனெனில் இயைபின்றி எடுத்துக் கூறும் இயல்புடையரல்லர் அடிகள்.

வெங்கதிர்க் கனலியின் வெப்பத்தால் ‘நீர்’ ஆவித் தன்மை அடைகின்றது. மண்ணிடை நீராக இருந்த அது தண்காற்றுப் படுதலால் நுண்ணிய நீர்த்துளியாகி மீண்டும் மண்ணிடை மழையாய் வீழ்கின்றது. வெம்மைத் தொடக்கமும் தண்மை முடிவும் உடையது மழை என்பது கண்கூடு. இஃது இலக்கிய உலகமே அன்றி அறிவியல் உலகமும் அறுதியிட்டுரைக்கும் உண்மையாகும்.

'மழைக் கருவுயிர்க்கும் அழல்' ((10:143) என்று சுருக்கி யுரைத்துப் பெருக்கமாகச் சிந்திக்கத் தூண்டுவார் அடிகள். கதிரோனால் எழுந்து படர்ந்த மேகம் ‘மலைவெம்மையுற்றது. அவ்வெம்மையை நீரால் தணிவிப்போம்' என்று கருதிச் செல்வது போன்றுளது என்று நயத்துடன் நவில்வர் கம்பர். (LITO: 28)

தண்மை, வெம்மையுடைய திங்கள், ஞாயிற்றைத் தனித் தனியே வாழ்த்திய அடிகள், அவ்விரண்டு தன்மைகளும் இணைந்ததாம் மழையினை அடுத்து வாழ்த்துதல் தகவுடையதாம்.

அடிகளின் மழை வாழ்த்தினையும் புகார் வாழ்த்தினையும் நினையுந்தொறும் குறுந்தொகைப் பாடல் ஒன்று (40) நெஞ்சிடை முகிழ்த்து எழுதல் உண்டு. முகிழ்த்தெழக் காரணம் என்னை எனின் இவற்றிடை அமைந்துள மாறா ணைப்புகளேயாம். அவ்வுயர்பாட்டு : :

“யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

என்பது. இ

வ்வொள்ளிய பாடல் அன்புக்கலப்பினை, நீர் நிலக்

கலப்புடன் இணைத்து விளக்கி நிற்றலை இனிதின் அறியலாம்.