உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

115

தலைவன் தலைவியர் இருவரும் தாம் இன்னார் என அறிந்து கொண்டார் அல்லர். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாமலே அன்பு மிகப் பெற்ற அவர்கள், பெற்றோர்களை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் இடைவெளி சிறிது மின்றி அன்புச் செறிவு அமைந்து விட்டது. எப்படி? செம் புலப்பெயல் நீர்போல ஒன்றுபட்டு விட்டன உள்ளங்கள். வானிடைப் பரவிக் கிடந்த பெயல், செந்நிலத்திடை வீழ்ந்து அச்செந்நிலத்தின் நிறத்தைப் பெற்றுத் தனக்குரியதாம் நீர்மையுடன் ‘செந்நீர்' ஆகின்றது. எங்கோ இருப்பது பெயல்; எங்கோ இருப்பது நிலம்; எனினும் இயற்கையாய் ஒன்றி இணைவு பெற்றன.! அக்கலப்பு அன்புடை நெஞ்சக் கலப்புக்கு நிகராகின்றது. த்தகைய மழையை, அன்புள்ளங்கள் ஒன்றுதலாம் திருமண வாழ்த்துப் பகுதியிலே போற்றுவது மிகப்பொருந்துவதாகின்றது.

இவ்வாழ்த்தில் மண்ணினை முற்கூறி மழையினைப் பிற் கூறக்கூடாதோ எனின், படைப்பு முறைமையும், உண்மைக் கூறும் உற்று நோக்கிப் பார்க்கும்போது அடிகளின் முறை வைப்பு, தனிச் சிறப்பினதாதல் தெளிவாகும்.

ஐம்பூதங்களின் - (விண், வளி, தீ, நீர், நிலம்) தோற்ற முறைப் படி நிலத்திற்கு முன்னையது நீராம். இதனை “நெருப்பாகி நீர் பயந்தனை, நீராகி நிலம்படைத்தனை (பெருந்தொகை 125) என்பதும், “நிலத்திற்கு முன்னாகிய நீர்" என்பதும் (புறம் 9 உரை), "உருவறி வாரா ஊழியும், உந்து வளி ஊழியும், செந்தீ ஊழியும், தண்பெயல் ஊழியும், இருநிலத்து ஊழியும்" என்பதும் (பரிபாடல் 2) நிலத்திற்கு முன்னையது நீர் என்பதைத் தெளிவு படுத்தும். இப்படைப்பு முறையன்றி, இயல்முறையும் நீரை முன்னிறுத்திக் காட்டுதற்கே இடம் தருகின்றது.

“நீர் நெகிழ்தலைக் குணமாகவுடையது; நிலம் செறி தலைக் குணமாகவுடையது" (சிலம்பு 3-26 அடியார்). இவ்விரு தன்மைகளும் வாழ்வில் புகுவார்க்கு இன்றியமையாத் தன்மைகளாம். புதுவாழ்வில் புகுவார்க்கு வற்புறுத்திக் கூறத் தக்கவையும் ஆம். உள்ள நெகிழ்ச்சி அன்பு; உள்ளத் திண்மையாம் செறிவு கற்பு. அன்பும் கற்பும் அமையா வாழ்வு வாழ்வாகாது. வாழ்வில் பொதுவாக ஒன்றியிருக்க வேண்டிய நெகிழ்வையும், செறிவையும் எப்பொழுது உரைப்பது? வாழ்க்கைத் துவக்கத்தில் தானே!

66

'அன்பு - அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம்’ என்றார் பேராசிரியர். (தொல் - மெய் - 12) “தான் வேண்டப்பட்ட