உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

பொருளின் கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி” என்றார் களவியல் உரைகாரர். (இறை -1) “அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு என்றார் வள்ளுவர். களவியலோ ‘அன்பின் ஐந்திணை' என்றே முதல் ஒலியை எழுப்புகின்றது.

'உள்ள நெகிழ்வே அன்றிச் செறிவும் வேண்டும்; ஒன்றுக்கு ஒன்று குறையா அளவில் வேண்டும்” என்று கருதும் அறநூல் வள்ளல், பெண் கற்பென்னும் திண்மை உண்டாகப் பெற வேண்டும் என்றும், தற்காத்தலும், தகைசான்ற சொற்காத்தலும் வேண்டும் என்றும் நிறை காக்கும் காப்புத் தேவை என்றும் பரக்கக் கூறுகின்றார்.

விட்டுக் கொடுத்து விளங்கச் செய்யும் நெகிழ்ச்சி எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை கட்டுக்குலையா உளத்துடன் இருந்து கவின் பெறுதல் என்பதாம். வாழ்வு நடக்க உள்ள நெகிழ்வும், வாழ்வு சிறக்க உள்ளச் செறிவும் வேண்டத் தக்கனவாகலின் நெகிழ்வுடைய மழையை முற்கூறி வாழ்த்தி, செறிவுடைய நிலத்தினைப் பிற்கூறி வாழ்த்தினார் என்று ஏற் படுகின்றது.

அன்றியும், ஐம்பெரும் பூதங்களிலே கட்புலனாம் தன்மையன மூன்றாம் அவை; தீ, நீர், நிலம். இவற்றுள் தீ மூன்று தன்மைகளையும், நீர் நான்கு தன்மைகளையும், நிலம் ஐந்து தன்மைகளையும் பெற்றிலங்குவது எவரும் அறிந்ததே. விண்ணுக்கு ஒலியும், காற்றுக்கு ஒலியுடன் ஊறும், தீயிற்கு ஒலி, ஊறுகளுடன் ஒளியும், நீருக்கு ஒலி, ஊறு, ஒளிகளுடன் சுவையும், நிலத்திற்கு ஒலி, ஊறு, ஒளி, சுவைகளுடன் மணமும் உண்டு. இத்தன்மைகள் இவற்றுக்கு உளவாதலை விளக்கமாக இரண்டாம், மூன்றாம் பரிபாடல்கள் கூறுவது காண்க.

முப்பண்புகளையுடைய

ஒளியை வாழ்த்தி, நாற் பண்புகளையுடைய மாமழையைப் போற்றி, ஐந்து பண்புகளை யுடைய மாநிலத்தை ஏத்தி வரன் முறையாக்கிக் கொண்டுள்ளார் அடிகள் என்றாகின்றது.

திருமணத்திற்கும் ஐம்பெரும் பூதப் பண்புகளுக்கும் தொடர்பு என்னை எனில் காண்போம். ஐம் பூதங்களின் மயக்கமே உடல். மாந்தர் உடலின் கால் பகுதியில் நிலத் தன்மையும், குடல் பகுதியில் நீர்த்தன்மையும், மார்புப் பகுதியில் நெருப்புத் தன்மையும், கழுத்துப் பகுதியில் வளித் தன்மையும், தலைப் பகுதியில் விண் தன்மையும் சிறப்பு நிலை பெற்றுத்