உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

117

திகழ்ந்து, பூதங்களின் மயக்கமே உடல் என்பதைத் தெளியக் காட்டும். ஐம்பூத மயக்கமாம் உடலில் ஐம்பூத இயல்பும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) செறிந்திருத்தல் தானே இயல்பு. இவ்வியல்பினை வளர்க்குமாறும். சிறக்கச் செய்யுமாறும் அன்றோ வாழ்க்கை அமைப்பு இருத்தல் வேண்டும்! இவ் வியல்புகளை வளர்க்குமாறு வாழ்க்கை உளதா? மண வாழ்க்கை உளதா?

66

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள" என்று வள்ளுவர் பேசிய பின் 'சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்” ஐந்தென அவர் வகுத்துக் காட்டிய பின் பெண்மையினிடத்தே ஐம்புல வின்பமும் அமைந்துள்ளது எனல் தேவையற்ற ஒன்று.

மாந்தர் எவருக்கும் உரியதாம் சுவை நிலைக் களத்தைச் சுட்டிக் காட்டினார் அறநூலார். அஃது அவர்க்கு இயல்பு. ஆனால் அடிகளோ தம் காவியச் சிறப்புக் கேற்ப மண வாழ்வின் செறிநிலை இன்பத்தை உரைக்கின்றார் - கோவலன் வாயிலாகக் கண்ணகியைப் பாராட்டு முகத்தான.

மனையறம் புகுந்து மங்கல அமளியிலே இருக்கும்

கண்ணகியை

66

'மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே"

என்று பாராட்டுகின்றான். இப்புகழ் உரையிலே ஐம்புலச் சுவையும் உளவாதலை “கட்குஇனிமையான் மாசற வோடிய பொன்னை ஒப்பாய், ஊற்றின் இன்பத்தான் முத்தை ஒப்பாய், உயிர்ப்பின் இனிமையால் குற்றமற்ற விரையை ஒப்பாய், சுவையின் இனிமையால் கரும்பை ஒப்பாய், இனிய இனிய மொழியை உடைமையால் தேனை ஒப்பாய்' என்றும், இவற்றைச் சொல்லியது ஒளியும், ஊறும், நாற்றமும், சுவையும், ஓசையுமாகலின் கண்டுகேட்டுண்டுயிர் துற்றறியுமைம் புலனும் ஒண்டொடி கண்ணே யுள' என நலம் பாராட்டப் பட்டன என்றும், அடியார்க்கு நல்லார் பொருளும் விளக்கமும், எழுதிச் செல்வது அவரது புலமையை விளக்காநிற்கும்.

ம்

மணம் மலருக்கு இயற்கை! மலருக்குத் தோற்றும் இடம் மண். மண்ணின் தனிச் சிறப்புத் தன்மை மணம். மணம் செறிந்து கூடி நிற்குமிடம் மலர். ஆதலால் மலருக்கு மணம் இயல்பாகி