உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ் வளம் 16

விட்டது. மணமில்லாத மலரை மலரென மதிப்பதும் வழக்கில்

ல்லை.

இம்மலர்களைப்போலவே மக்களையும் மலர் எனக் கொண்டது தண்டமிழ் உலகம். ‘அவன் அரும்பினான்' என்று பேசும் வழக்கு ஆண் ஒரு மலர் என்பதை மெய்ம்மைப் படுத்தும். 'அவள் பூப்படைந்தாள்' என்னும் நடைமுறை பெண் ஒரு மலர் என்பதை உறுதிப்படுத்தும். அரும்புதலும், பூத்தலும் மலருக்குத் தானே உண்டு! அரும்பிய ஒன்றும் மணம் பரப்பாதிருப்பின் பயன் என்ன? மணத்தின் பிறப்பிடமாம் மண்ணிடைத் தோன்றியதன் பயன் தான் என்ன? மலரில் மணம் இருத்தல் இயற்கை போலவே மாந்தர் மணம் செய்து இன்புற்று வாழ்தலும் இயற்கை! மாற்று வழிகள் இயற்கை யல்லா வழிகள். செயற்கை வழிகள். மணத்திற்கு உறையுளாம் மண்ணை வாழ்த்துவதும், மலரையும் மணத்தையும் பெருக்கும் மழையை (ஐங்குறு. 328) வாழ்த்துவதும் இயற்கை வாழ்த்தாம்.

மழை என்னும் சொல்லுக்கு 'இன்பம்' என்னும் பொருள் உளதாதலைப் பெருந் தொகை மழைநாள் நமக்கு எனக் காட்டும். (2200-2) இன்பப் பொருளாம் மழையை வாழ்த்துதல் இன்ப வாழ்த்தாக - மங்கல வாழ்த்தாக அமைதல் நோக்கத் தக்கது.

திங்கள், ஞாயிறு, மழை எனப் பொதுமை வாழ்த்துக் கூறிய அடிகள் “மாநிலம் போற்றுதும்” என்றோ “நானிலம் போற்றுதும்” என்றோ கூறாது “பூம்புகார் போற்றுதும்’ பூம்புகார் போற்றுதும்" எனச் சிறப்பு முறைமையால் கூறினாரே ஏன் எனில் அதன் காரணம் வெளிப் படையாகவே அறியக் கிடக்கின்றது.

புகார் “பொதுவறு சிறப்பிற் புகார்” என்று அடிகளாலேயே குறிக்கப் படுவது ஆகலானும், காவியத் தலைவன் தலைவியர் தோன்றிய இடம் புகார் ஆகலானும், தாம் எடுத்துக் கொண்டு பாடப் புகுந்த பகுதி புகார்க் காண்டம் ஆகலானும், மூவேந்தரையும் ஒப்ப மதிக்கும் உளநலம் அடிகட்கு உண்டு ஆகலானும், வாழ்த்துக்கும், வரலாற்றுகும் தொடர்பு காட்ட வேண்டிய இடம் அஃது ஆகலானும் “பூம்புகார் போற்றுதும்” என்று போற்றினார் என்க.

இங்குக் காட்டிய

அனைத்தும் திங்கள்,

ஞாயிறு,

மழை, புகார் என வரன் முறை கொண்டமைக்காகக் கண்ட குறிப்புக்களாம். இனி இவ்வாழ்த்திலே அடங்கியுள்ள அறநெறிக் னி கூறுகள் சிலவற்றைக் காண்போம்.