உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

119

அருள் செய்தலும், அறங்காத்தலும், கொடை புரிதலும், குடிதழுவலும், செங்கோல் வேந்தர்களது கடமைகளாம். இவற்றைக் கடமைகளாகக் கொண்டிருக்குமாற்றைத் தமக்கும் பிறருக்கும் அறிவிக்குமாறே குடையையும் திகிரியையும் கருவிகளாகக் கொண்டனர்; கொடையையும் குடியோம்பலையும் குணங்களாகக் கொண்டனர்.

பொறுப்பு மிகக் கொண்டு கடனாற்றுவோர் வாழ்வில் களிப்புக்கு இடம் குறைவே. நேரிடைக் களிப்பும் அவர்கட்கு வாய்ப்பது இல்லை. தம் கடனாற்றால் பிறர் வாழ்வில் இன்பம் மல்கிற்றேல் அவரின்பம் நோக்கி இவரின்பங் கொள்வர். அதுவே இவர் பெறும் இன்பமாம். அன்றிக் களியாட்டம் ஆடிக் கண்ட வாறு பொழுதைக் கழித்துத் திரிவோர் உளரேல் அவர் அறவகையால் கடப்பாடு ஆற்றுதலைத் துறந்தோராதல் வேண்டும். ஆயின் மக்களை உயிரெனக் கருதும் மன்னவன் வாழ்வு வெளித்தோற்றத்திற்குப் பல்வேறு நலங்கள் கனிந்ததாக இலங்கினாலும் உள்நோக்கி உள்நோக்கி அறிவார்க்கு இன்னல் பயப்பதே என்பது தெளிவாகும். இதனாலே "பொன்முடியன்று மன்னவன் சூடுவது முண்முடியே” என்று மொழிந்தோரும்

உளர்.

பல

இளங்கோவடிகளார் வடவாரியர் படைகடக்க நிற்கும் அண்ணன் வாயிலாக,

“மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்

என்று திட்ட வட்டமாய் உரைத்து, மழை உரிய காலத்தில் பெய்யாவிட்டாலும், மக்கள் ாலும், மக்கள் பல்வேறு துயர்கட்கு ஆட் பட்டாலும் உலகம் மன்னனையே பழிக்கும்; ஆகலின் மன்னவர் நன்குடிப் பிறத்தல் துன்பந் தருவதே அன்றி இன்பஞ்செய்வது ல்லை என்று வற்புறுத்துகிறார்.

செங்கோல் மன்னனுக்குத் தன்னுயிர் என ஒன்றில்லை. மக்களே அவன் உயிர். அவ்வாறாயின் மக்களாம் உயிர்க்குத் துயர் வருமாயின் அத்துயர் நேரிய மன்னனைக் கூரிய வாள் போல் வாட்டுதல் உறுதி.

மன்னுதல் என்னுஞ் சொல்லுக்கு நிலை பெறுதல் என்பது பொருளாம். உலகில் நிலைபெற்றவனே மன்னவன் ஆவான். அரசு ஏற்றவர் அனைவரும் அரசர் ஆகலாம். ஆனால் உலக