உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் 16

ஏட்டில் மன்னினோர் அன்றி மற்றையோர் மன்னவர் ஆகார். வ்வுலகம் நிலையிலாத் தன்மையுடையது. நிலையிலா உலகில் நிலைப்பது எளிதோ? எல்லாருக்கும் கூடுவதோ? சிலர்க்கே கைகூடும்? கூடுதற்கும் வழிவகை வேண்டும்.

66

நிலையிலா உலகில் நிலைக்க வேண்டுமாயின் புகழ்மிக்க செயல்களைச் செய்தாக வேண்டும். புகழ் ஒன்றே அழியாதது. ஒன்றா உலகத்துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்ப தொன்றில்' என்றார் அறநெறி அண்ணல். “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத்தா மாய்ந்தனர் என்றார் புறநானூற்றுப் புலவர். புகழால் நிலைக்குமொன்றே புவியாள்வோர் கடனாம்.

புகழ்க் கோயிலுக்குப் புகுவாயில்கள் எத்துணை? ஒன்றா இரண்டா? பலப்பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நான்காம். அவை கொடை, அளி, செங்கோல், குடியோம்பல் என்பவை.

66

அடுக்கிய மூவுலகும் கேட்குமே. கொடுத்தார் எனப் படுஞ்சொல்” என்று கொடைச் சிறப்பை எடுத்துரைக்கின்றது நாலடி. "பொருள் அற்றார் அப்பொருளை முயற்சியால் மீண்டும் பெறக் கூடும்; ஆனால் அருள் அற்றார், அருளை மட்டுமோ அற்றார்? அனைத்தும் அற்றார்' என்கின்றது குறள். "கொடும்புலி வாழும் காட்டினும் கொடிது கொடுங்கோல் மன்னர் வாழும் நாடு" என்று கூறிச் செங்கோலின் இன்றி யமையாமையை வற்புறுத்துகின்றது பிற்கால நூல். “மன்னவ! வெயில் மறைக்குமாறு பிடிக்கப் பெற்றதோநின் வெண்குடை? குடிகளைக் காத்தற்காக அன்றோ எடுக்கப்பட்டது என்று பன்னுகின்றது தொன்மை நூல். வ்வனைத்தையும் இறை மாட்சியிலே,

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி"

என்று தொகுத்துரைக்கின்றார் பொய்யில் புலவர். கண்ணாகிய உறுப்பு இருந்தும் அதனிடை அருள்வரப் பெறார் கண்ணுடையர் ஆகார். அது போல் அரசுப் பொறுப்பு இருந்தும் இந்நான்கு பண்புகளும் இல்லார் அரசர் ஆகார்; உடையரே அரசர்; அரசருள் ஒளியுடைய (புகழுடைய) அரசர். ஆகலின் தகை மாண்ட புகழ்க் கோயிலுக்குச் செல்லும் வகை மாண்ட வாயில்கள் பலவற்றுள்ளும் கொடையளி செங்கோல் குடி யோம்பல் என்னும் நான்கும் நற்கலை கவினிய பொற்புறு கோபுர