உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் பொருள்

121

6 வாயில்கள் எனல் தகும். இனி, இதற்கும் சிலப்பதிகார மங்கல வாழ்த்திற்கும் உரிய தொடர்பென்னை எனில் காண்போம்.

66

"முடிகெழுவேந்தர் மூவர்க்குமுரிய தொடர்நிலைக் காவியத்தை அடிகள் பாட வேண்டு" மென்று தண்டமிழ்ச் சாத்தன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்பச் சிலம்பு பாடும் சேரர் வழிவரும் அடிகள் வேந்தருக்கு ஒளியாம் வழிகளைத் தெளிய உரைத்துப் போதுகின்றார். அவர் தம் காவியத்தில் பல இடங்களில் அவ்வாறு உரைக்கினும் தலையாய இடம் மங்கல வாழ்த்தாகவே புலப்படுகின்றது.

“யாம் திங்களைப் போற்றுவேம் - சோழனது வெண்குடை போன்று தண்ணளி செய்தலால்; யாம் ஞாயிறு போற்றுவேம் சோழனது திகிரிபோல் (சக்கரம்) மேரு மலையை வலஞ் சுற்றி வருதலால்; யாம் மாமழையைப் போற்றுவேம் - சோழன் அருள் போல் பொழிந்து வளம் பெருக்குதலால்; யாம் பூம்புகார் போற்றுவேம் - சோழன் குலத்துடன் தோன்றி உயர்ந்து விளங்குதலால்; என்பதனை,

66

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான்.

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலந்திரித லான்.

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற் கவனளிபோல்

மேனின்று தான்சுரத்த லான்.

“பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி உலகிற் கவன்குலத்தோ டோங்கிப் பரந்தொழுக லான்.'

99

-

என்று இசைநலம் பொலியப் பாடுகின்றார் அடிகள். இப் பாடல்களிலே திங்களால் குடிக்கு நிழலாம் அளியும், ஞாயிற்றால் செங்கோலாம் ஆண்மையும், மழையால் வளஞ் சுரக்கும் கொடையும், பூம்புகாரால் குடியோம்பலும் குறிக்கப் பெற்றமை ஊன்றி உணர்வார்க்குத் தெளிவாகாமற் போகா.