உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

அரசர்க்கென்று அறநூல் வகுப்பனவற்றையே தாமும் கூறுவான் எடுத்துக் கொண்ட அடிகள் நூலின் தொடக்கப் பகுதியிலேயே இயற்கை வாழ்த்துரைக்கு முகத்தான் இவற்றை இனிதின் ஓதுகின்றார். தொடக்கமும் முடிவும் எவருள்ளத்தையும் எளிதில் ஈர்த்து நிலை பெறுத்தும் பெற்றி கொண்டிலங்குவனவாம். ஆதலின் அரச நெறிமுறையறைந்து நூல் தொடங்கும் அடிகள் மாந்தர் நல்வாழ்வுக்குரியனவாம் பொருளறங்களை விரித்துக் கூறும் வரந்தரு காதையுடன் காப்பியத்தை முடிக்கின்றார்.

மங்கல வாழ்த்துப் பகுதியில் கூறும் குறிப்புரைகளை நூலினகத்து விரித்தும் விளக்கியும் செல்வது அடிகட்கு இயல்பாதலை நூலினை மேற்போக்காக நோக்குவோரும் உணர்வர் என்பது ஒருதலை.

திங்களை வெண் கொற்றக்குடையுடன் யுடன் இணைத்த அடிகள் “தண்மதி யன்ன தமனிய வெண்குடை” (28: 1-2) என்று வடிவுக்கும். "மண்குளிரச் செய்யும் தண்குடை (19: 21) бT GOT MI பண்புக்கும் ஒப்புமை காட்டியுள்ளார்.

و,

ஞாயிற்றைச் செங்கோல் சிறக்கச் செய்யும் அறத் திகிரியுடன் ஒப்பிட்டுக் காட்டும் அடிகள் “விரிகதிர்பரப்பி உலக முழு தாண்ட ஒரு தனித்திகிரி உரவோன்” (2: 1-2) என்று வடிவுக்கும், "பொற்கோட்டுழையதா எப்பாலும், செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனியாழி” என்று தொழிலுக்கும் உவமை காட்டியுள்ளார்.

மழையினைக் கொடையுடன் ஒப்பிடும் அடிகள், சோழன் கொடைச் சிறப்பையும், சேரன் கொடை மாண்பையும் கேட் போர் நயப்பும் வியப்பும் ஒருங்கெய்தக் கூறுவதே அன்றி "மன்னவர் பின்னோர்' என்று குறிக்கப்படும் வணிகருள் உயர்ந்தோங்கிய மாநாய்கன் "மாகவான் நிகர்வண்கையன் என்றும், கோவலனைச் "செம்பொன் மாரிகொள்கையிற் பொழிந்தோன்” (15 : 41) என்றும் கூறுகின்றார்.

குலந்தோடங்கிப் பரந்தொழுகும் நிலச் சிறப்பினைக் கூறும் அடிகள் "பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற்புகார்" (1:15-6) என்றும், "பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் (1: 15 - 6) OT ÅT MILD

குறிப்பிடுகின்றார்.

இவற்றை நோக்குங்கால் திங்களும், ஞாயிறும், மழையும், மண்ணும் தந்தொழில் திரியாத் தகைமைவாக் கடனாற்றினாலும்