124
இளங்குமரனார் தமிழ் வளம் – 16
‘சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்’ என்று அச்சிடப்பட்ட பதிப்பு அது. சேரமான் செய்த சிலப்பதிகாரக் கதை எனவரும் சிலப்பதிகாரக் காப்புச் செய்யுளைக் கொண்டும், பெருமாளையும் நாயனாரையும் ஒட்டிக் கொண்டும் புனையப்பட்ட பெயராகலாம்.
ஆசிரியர் இயற்பெயர் முதலாகிய சரித்திரம் ஒன்றும் தெரியவில்லை. இவருடைய தமயன் பெயர் செங்குட்டுவன் என்பது மாத்திரம் தெரிகிறது' என முகவுரையில் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரம் புகார்க்காண்டம் உரையுடன் 1880 இல் வெளிவந்தது. அதனை வெளிப்படுத்தியவர் திரிசிரபுரம் பெரும் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாணவர் தி. க. சுப்பராயச் செட்டியார். கானல் வரிக்கு அவரே உரை யெழுதியும், மற்றைப்பகுதிக்கு அடியார்க்கு நல்லாருரையை அடியாக வைத்துக் கொண்டு அவரே உரையெழுதியும் வெளியிட்டார். அது 'சென்னை மெமோரியல்' அச்சுக் கூடத்தில் பதிக்கப் பட்டது. பதிக்கப்பட்ட காலம் விக்கிரம ஆண்டு சித்திரைத் திங்கள். சுப்பராயச் செட்டியார் சென்னை அரசினர் நார்மல் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தவர். ஈரெண்கவனகராக (சோடசாவதானராக)த் திகழ்ந்தவர். 1869இல் பதினோராந் திருமுறையை முதற்கண் அச்சிட்டவர்.
.
சிலப்பதிகார முதற்பதிப்பு வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப்பின்னே 1892 1892 இல் இல் பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு வந்தது. அடியார்க்கு நல்லாருரை அரும்பதவுரை ஆகியவற்றுடன் கூடிய பதிப்பு அது.
-
இம்மூன்று பதிப்புகளும் வெளிப்படுமுன் 1869 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 18 ஆம் நாள் சிலப்பதிகாரத்தை ஏட்டுப்படியில் இருந்து கடிதப்படியில் தம் கையெழுத்தில் படியெடுத்து முடித்து வைத்துள்ளார் எ. ஆர். கிருட்டிண பிள்ளை. கிறித்தவக் கம்பரென விளங்கிய அவர்தம் கையெழுத்துப்படி தமிழிசைச் செல்வர் பேராசிரியர் வீ. ப. கா. சுந்தரனார் வழியே என் பார்வைக்கு வாய்ந்தது. அக் கைப்படியால் இருநூறுக்கு மேற்பட்ட பாடங்கள் கிடைக்கின்றன. சில பாடங்கள் சான்றாக இவண் காட்டப் படுகின்றன.
இங்குக் காட்டப் படுவன, உரையொடும் ஒப்பிட்டுப் பார்த்து உரிய பாடப் பொருத்தம் கண்டு உவந்து வரைவன மட்டுமேயாம்.