உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ் வளம் 16

ஈருரைகளிலும் “புறங் கொடுத்த வழி" என்னும் செய்தி தெளிவாக உளது. “புறத்தெடுத்த” என்னும் மூலப்பாடத்தொடு செவ்விதில் பொருந்திற்றில்லை என்பது புலப்படுகின்றது. அப்பாடம்.

“பேரிசை மன்னர் பெயர் புறக்கொடுத்த

சீரியல் வெண் குடை

என எ. ஆ. கி. படியில் உள்ளது.

66

வலம்படு தானை மன்ன ரில் வழிப்

புலம்பட விறுத்தவிருந்தின் மன்னரின்’'

என்பது அந்திமாலைச் சிறப்புச் செய் காதை (11-12) இதில் வரும் ‘புலம்படு' என்பதற்கு அரும் பதவுரை இல்லை. அடியார்க்கு நல்லாருரை இப்பகுதிக்கு "வெற்றி பொருந்திய தானை மன்னர் இல்லாத இடமறிந்து அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்துவிட்ட குறுநில மன்னரைப் போல" என்பது. இதில் ‘புலம்பட' என்பதற்கு “நிலமெல்லாம் கெடும்படி” என்பதே உரை என்பது விளக்கம்.

66

இப்பகுதியின் பாடம்,

“வலம்படுதானை மன்னரில் வழிப்

புலங்கெட விறுத்த விருந்தின் மன்னரின்”

என எ. ஆ. கி. படியில் உள்ளது. 'புலம்பட' என்பதனினும் ‘புலங்கெட’ என்பதன் செவ்வியல் வடிவம் உரைப் போக்கால் இனிதுணர வாய்க்கின்றது.

சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் வள்ளைப் பாட்டின் முதற்பாட்டு ஆய்வுக்குரியது. அதனைப் பற்றி 'அகராதி நினைவுகள்' என்பதில் (10) வையாபுரியார் விரித்துரைத்தார். அவர் கண்டுரைத்த பாடம் சிலம்பில் இதுகாறும் போற்றப் படவில்லை.

“தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக்கொடித் திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத் தோட்பாடலே பாடல்

பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்"

என்பது வள்ளை முதற்பாட்டு.