உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

127

இப்பாடல் ஈற்றடியில் ‘ஆரிக்கும்' என்றுள்ள சொல்லுக்கு ஆர்க்கும்' என்று பாடமுண்மையைப் பெரும் பேராசிரியர் உ. வே. சா. காட்டுகிறார். இரண்டு பாடங்களும் இடத்தொடும் பொருளொடும் பொருந்தாமை மேல்வரும் மேல்வரும் வள்ளைப் பாடல்கள் இரண்டாலும் விளங்குகின்றது.

இரண்டாம்வள்ளை, “வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்" என்றும் மூன்றாம் வள்ளை, "பனந் தோடுளங்கவரும் பாடலே பாடல்” என்றும் வருகின்றன. இரண்டாம் வள்ளை பாண்டியனைக் குறிக்குமாறு “வேப்பந்தார்” கமழ்கின்றது. மூன்றாம் வள்ளை சேரனைக் குறிக்குமாறு 'பனந்தோடு ஒலிக்கிறது; ஆனால் சோழனுக்குரிய முதற்பாட்டில் அவன் மாலை இடம் பெற்றிலது. அரும்பதவுரையில் ‘ஆரிக்கும் என்பதற்குக் குறிப்பு இல்லை. அடியார்க்கு நல்லார் உரையோ 'ஊர்சூழ்வரிக்கு’ மேல் (19) கிடைத்திலது. ஆதலால் உரையால் தெளிவுறுத்த முடியாத பாடத்தை ஏட்டுப்படியால் தா தான் தெளிவாக்க முடியும்.

·

செவ்விய L பாடமமைந்த படி வையாபுரியார்க்குக் கிடைத்தமையால் அதனைக் கொண்டு 'ஆரிரக்கும்' எனப் பாடம் ம் இருத்தல் கண்டு களித்தார். அதற்கு முன்னர் அகராதியில் (சென்னைப் பல்கலைக் கழக அகராதியில்) “ஆரிக்கும் - ஒலிக்கும்” எனப் பொருள் ஏறி விட்டதைச் சுட்டித் திருத்தம் காட்டினார். ஆரிரக்கும் என்பது சோழற்குரிய ஆத்தி L மாலையை விரும்பும் என்னும் பொருள் தந்து இவ்வள்ளைகள் மூன்றும் சோழன், பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தரையும் பாடுவனவாய் அமைந்து பொருளொடு பொருந்தி நிற்கின்றன. செம்பியனைச் சுட்டும் பாடலிலே, அவன் ஆர் ( ஆத்தி மாலை) ரக்கும் (ஆரிரக்கும்) காட்சி காணத் தக்கதேயாம். ‘ஆரிக்கும்’ என்னும் தவறான பாடம் அவ்வளவில் ஒழியாமல் ‘ஒலிக்கும்’ என்னும் தவறான பொருளைப் படைத்துக் கொள்ளவும் தூண்டி விட்டுக் குற்றப்பட்டு நின்று விட்டது கருதத் தக்கது. ஆர்க்கும் என்பதற்கு ஒலிக்கும் எனப் பொருள் உண்டேயன்றி, ஆரிக்கும் என்பதொரு சொல்லோ அதற்கு அப்பொருளோ இல்லை என்பது கண்டு கொள்ளத் தக்கது.

வ்வள்ளைப் பாட்டின் இறுதியடி,

"பாவைமார் ஆரிரக்கும் பாடலே பாடல்

என எ. ஆ. கி கைப்படியில் உள்ளது. சிலப்பதிகாரப் பதிப்பு எதுவும் வெளிப் படுதற்கு ஏழாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட படி