உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

அது என்பது எண்ணற்குரியது. சிலப்பதிகாரப் பதிப்புக்கு 25 சுவடிகள் கிடைத்தும், கிடையாத பாடம் வையாபுரியார் வயத் திருந்த சுவடியிலும், என்றி ஆல்பிரட்டு கிருட்டிண பிள்ளை கையெழுத்துப் படியிலும் இருந்தன என்றால் சில சுவடிகளால் பெறுகின்ற பயனின் அருமை விளங்கும்! சிலப்பதிகாரப் புதுப் பதிப்புகளில் இப்பாடம் இனி ஏறுதல் வேண்டும்.

‘நீடிருங் குன்றம்' என்னும் வெண்பா நூற் சிறப்புப் பாயிரம் என நூன்முகப்பில் அச்சிட்ட புத்தகங்களில் உள்ளது. ஆனால் அவ்வெண்பா எ. ஆ. கி கைப்படியில் நூலின் நிறைவில் உள்ளது. அதில் பாடங்களும் உள்ளன.

பதிப்பில் உள்ள பாடம் :

“நீடிருங்குன்ற நிழல்காலு மண்டிலத்துக்

கோடுகோடாய்த் தோன்றுங் கொள்கைத்தே - கூடலார் கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன் தண்டா வுரை முத் தமிழ்

எ. ஆ. கி. படியிலுள்ள பாடம் :

“நீடிருங் குன்ற நிழல் காணு மண்டிலத்துக்

கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே - கூடலான் கொண்டாடுஞ் செஞ்சொற்குடக்கோ முனிசேரன் தண்டா வுரைமுத் தமிழ்”

நூற்கட்டுரை என்னும் இறுதிப் பகுதியில்,

66

ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்

காட்டுவார் போற்கருத்து வெளிப்படுத்து”

என்றுள்ள அடிகளும்

66

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்”

என்னும் வள்ளுவமும்,

66

'தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்"

L

(15-6)

என்னும் வள்ளுவ மாலையும் இவ்வெண்பாவொடு வைத்து எண்ணத் தக்கன.