தமிழ் வளம் - பொருள்
129
ஆடி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி! மூக்குக் கண்ணாடியன்று! தன் முன்னுள்ள பருமையை முழுமையாகத் தன்னுள் சுருக்கிக் காட்டுவதும், காண்பாரைக் காண வைப்பதும் இக்கண்ணாடி இயல்பு. அப்பொருள் ‘நிழல் காலும்' என்பதனினும் 'நிழல் காணும்' என்பதில் இயல்பாக அமைந்து கிடத்தல் வெளிப்படை! மேலே காட்டிய காட்டுகள் அனைத்தும், காட்டலும் காணலுமாதலைக் கண்டு தெளிக. காலுதல் என்பதற்குக் கக்குதல், பொழிதல், வடிதல், விடுதல், உமிழ்தல் முதலிய பொருள்கள் உளவேனும் இக்காணுதல் பொருள் இயல்பாகப் பெற வாய்த்திலதறிக.
இனிக் ‘கூடலார்' என்பது நாடு தழுவியது, 'கூடலான்' என்பது அரசன் மட்டில் அமைந்தது! மன்னனே கொண்டாடும் சிறப்புப், பெருஞ் சிறப்பெனல் அக்கால நிலை. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனக் கண்ட காலம் அது! அதற்கு ஏற்பக் ‘கூடலான்' எனத் தகும். 'கூடலார்' எனினும் ஏற்பதே! னெனில் ‘கூடலார்' என்பதில் கூடலானும் அடங்கியவன் தானே!
ஏட்டுப்படி, கைப்படி ஆகியவற்றை வாய்க்கப் பெற்று அச்சுப்படியொடு ஒப்பிட்டுப் பாடங் கண்டு பதிப்பித்தல் ஓர் அரும் பணியாக மேற்கொள்ளப்பட வேண்டும்! அவ்வரும் பணி அருமைப் பணியென்பது அங்கைக்கனி.
இமயத்தில் புலிப்பொறி பொறித்த திருமாவளவனுக்குப் பலரும் கொடுத்த கொடைகளைக் குறிக்கும் அடிகள்,
“மயன்விதித்துக்கொடுத்த மரபின இவைதாம்”
(5: 108)
என்று கூறுவதாக அச்சுப் பதிப்பில் உள்ளது. “இவை தனித் தனி இத்தன்மைய வாயினும்” என அரும்பதவுரை அமைகின்றது. இதற்குத்தக,
“மயன்விதித்துக்கொடுத்த மரபின வாயினும்”
எனவரும் எ. ஆ. கி. எழுத்துப் பொருந்தி நிற்கின்றது.
மதுரை மாநகரில் வைகறைப் பொழுதில் எழுந்த ஒலி களைக் கூறும் பகுதியில்,
66
நான்மறை யந்தணர் நவின்ற ஓதையும்
மாதவர் ஓதிமலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்'
(13:131-4)