உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம் 16

எனத் தொடர்கின்றது பாடல். இதில் நாளணியோதையும் என்னும் பாடம் எ. ஆ. கி. எழுத்தில் உள்ளது.

மதுரை மாநகரில் நிகழும் பல்வேறு தொழில்களைக் கூறும் பகுதியில், (14, 175) 'வேதினத் துப்பவும்' 'வேதினத் தீர்ப்பவும்' என்பன பாடங்களாக உள்ளன. “வேதினத் துப்பவும் - ஈர்வாளால் வலியப் பெற்றனவும்; என்றது ஈருங் கருவியாற் பண்ணப் பட்டன என்பது அரும் பதவுரை. “ஈர்வாள் தொடக்கத் தனவாகிய கருவிகளும் துப்பு - கருவி” என்பது அடியார்க்கு நல்லாருரை. இத்தொடரின் பாடம் எ. ஆ. கி. படியில்.

وو

“வேதினத்துப் படுவவும்”

·

(14. 176)

என்றுள்ளது. பொருளை நோக்க இப்பாடம் பொருந்தி நிற்றல் தெரிகின்றது.

66

வாள்வினை முடித்த மறவாள் வேந்தன்

ஊழி வாழியென் றோவர் தோன்ற"

என்பது அச்சுப் பாடம் (26, 123-4). ஓவர் -ஏத்தாளர் என்பது எ. ஆ. கி. கைப்படி.

வரந்தரு காதையில், கண்ணகியார் வாக்காக,

“தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்!”

அதன் பின்,

(80. 164)

66

ஆங்கது கேட்ட அரசனும் அரசரும்

ஓங்கிருந்தானையும் உரையோ டேத்த”

என்பது அச்சு நூற்பாடம். முதல் அடியில் ‘அரசரும் அரசின்' என்பது எ. ஆ. கி. படியில் உள்ள பாடம். அரசரும் என்பதில் சேரனொடு பிறரும் அடங்குவர் ஆகலின், எண்ணத்தக்கது. இவ்வாறே பாடங்கள் மிகப் பல கிடைக்கின்றன.

66

அரும் பதவுரையின் தொடக்கத்தில் காப்புச் செய்யுளாக,

கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும்

விரும்பும் விநாயகனை வேண்டி - அரும்பவிழ்தார்ச் சேரமான் செய்த சிலப்பதிகா ரக்கதையைச்

சாரமாய் நாவே தரி”