உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

131

என்னும் பாடல் அச்சு நூலில் உள்ளது. அப்பாடலுடன், எ.ஆ.கி. படியில் கீழ்வருவனவும் உள்ளன:

“இந்திர திருவில் இயைந்தாங் கியைந்த

66

அந்தமில் இருமுது குரவரை

மைந்தரோடு பழிச்சுது மதி நலம் பெறவே”

"கவலைமற்றெவனோ உவலையொன் றுடைமையிற்

66

பெண்ணொரு பாகனைப் பொரூஉம்

அண்ணல் யானை அருள் வழிச் செலினே”

அருந்திறன் முருகன் அஞ்செஞ் சீறடி

பொருந்திய அன்பொடு போற்றுதும்

திருந்திய இருந்தமிழ் பெருகுதற் பொருட்டே”

என்பவை அவை.

பதிகத்தின் இறுதியில், “இது குட்டச் செந்தூக்கு வந்த ஆசிரியம். பதிக முற்றும்” என்று குறிப்புள்ளது. இவ்வாறே மங்கல வாழ்த்தின் நிறைவில் “இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா” என்னும் குறிப்புள்ளது. அப்பாடல், இருபதாம் அடித் தொடக்கத்தில், "மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா" என்றும் உள்ளது.

மனையறம் படுத்த காதை நிறைவில் “இதுநிலை மண்டில ஆசிரியப்பா" என்றுள்ளது.

'கடலாடு காதை’ ‘கடலாட்டுக்காதை' என பிறவினைப் பட்டு நிற்கின்றது. அதன் நிறைவில் "இது நிலை மண்டில ஆசிரியம்” என்றுள்ளது.‘கடலாட்டுக் காதை முற்றும்' என்றும் பொறிப்புளது.

கானல் வரியில் கடல்புக்கு, கொடுங்கண், ஓடுந்திமில் என்பன ‘திணை நிலைவரி' என்பது அச்சுப்பாடம். அவற்றைச் ‘சாயல்வரி’ என்கிறது எ.ஆ.கி படி.

‘வேறு' என்னும் சுட்டுடைய, ‘பவளவுலக்கை’ ‘புன்னை நீழல்’ ‘கள்வாய் நீலம்' என்னும் வரிப்பாடல்கள் ‘துள்ளல் வரி' என எ.ஆ.கி. பாடம் சொல்கிறது.

இவ்வாறே 'வேறு' என்னும் சுட்டுடைய ‘சேரன் மட வன்னம்' என்னும் வரியைத் ‘திணை நிலவரி' என்கிறது கைப்படி.