உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

வேட்டுவ வரி நிறைவில் 'இது கூத்தாற் பெற்ற பெயர்; பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, வேட்டுவ வரி முற்றும்’ என்றுள்ளது எ.ஆ.கி பாடம்.

தாழாஅள்" என்னும்

கட்டுரை காதை "தெய்வம் தொழாஅள்

வெண்பாவின் பின்

“மொழிமுறை மொழிமறை ஒன்றிய பிறைமொழியே சீர்மொழிக்கட்டுரை காதை முற்றும்

என்னும் குறிப்பு கைப்படியில் உள்ளது.

66

குன்றக்குரவையில் "எற்றொன்று முதல் மூன்றும் சிறைப்புறம். தோழிக்குத் தலைவி சொல்லியது” என்றுள்ளது. அக்குறிப்பு அரும்பதவுரையிலும் உள்ளது. அதனுடன் “முன்னிலைப் புறமொழியுமாம்" என்பதும் அரும் பதவுரைக் குறிப்பு.

வாழ்த்துக்காதையில் ‘என்னேயிஃ தென்னே' என்பதன் தலைப்பு அச்சுப்படியில் "செங்குட்டுவன் கூற்று" என்றுளது. கைப்படியில் “வானோர் வரவு” என்றுளது.

தெரிந்துரைத்த இவற்றையன்றிப் பாட வேறுபாடும், பிறவும் நிரம்பவுள. படியாய்வும், ஒப்பாய்வும் பயன்மிக்கன என்பதை ஆய்வுடையார் மேற்கொளல் நலப்பாடாம் என்பதைச் சுட்டுமாறே, இவற்றைக் காட்ட நேர்ந்ததென்க.

9. கொற்கை

"கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழிய”னைச் சிலம்பு பாடுகின்றது. "வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன் புகல்" நூல், இளஞ் சிறுவரும் அறிந்தது! பழங் கொற்கை, பரவை அலைப்பால் பட்டழிந்தாலும், அக் கொற்கைச் சிறப்பும், கொற்கைப் பெயர் தாங்கியுள்ள ஓர் ஊரும், ஏட்டு வழக்கிலும், நாட்டு வழக்கிலும் இன்றும் விளங்கி வருகின்றன.

கொற்கையின் சிறப்பை முதற்கண் ஆய்வின் வழியே உலகுக்கு உணர்த்தியவர் முனைவர் கால்டுவெல்! 'கோ நகர் கொற்கை' என்னும் நூல் வழியே கொற்கையைத் தடம் பதித்துக் ம் காட்டியவர் நுண்கலைச் செல்வர் அ. இராகவன்,

-